9 ஆண்டுகளுக்குப் பின் மீரா ஜாஸ்மின் தமிழில் என்ட்ரி!- ரன்,ஆயுத எழுத்து வரிசையில் மாதவன் உடன் இணையும் புதிய படம்! செம்ம அப்டேட் இதோ

மாதவன் சித்தார்த் நயன்தாரா நடிக்கும் தி டெஸ்ட் படத்தில் மீரா ஜாஸ்மின்,meera jasmine joined in the test movie with madhavan | Galatta

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது தமிழ் சினிமாவில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட்டான காம்பினேஷன்களில் ஒன்றான மாதவன் - மீரா ஜாஸ்மின் காம்போ, முன்னதாக வெளிவந்த ரன் மற்றும் ஆயுத எழுத்து ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இந்த புதிய திரைப்படத்தில் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, கடந்த 2002ம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், மாதவன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை மீரா ஜாஸ்மின், தொடர்ந்து தளபதி விஜயின் புதிய கீதை, அஜித் குமாரின் ஆஞ்சநேயா, இயக்குனர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து, விஷாலின் சண்டக்கோழி, தனுஷின் பரட்டை என்கிற அழகுசுந்தரம், பரத்தின் நேபாளி, விஜயகாந்தின் மரியாதை, பிரசாந்தின் மம்பட்டியான் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே தனக்கென தனி இடம் பிடித்தவர்.

கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த இங்க என்ன சொல்லுது மற்றும் விஞ்ஞானி ஆகிய படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரை உலகில் என்ட்ரி கொடுக்கிறார். அந்த வகையில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் தி டெஸ்ட் திரைப்படத்தில் மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளார். தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், காவியத்தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, கேம் ஓவர், ஏலே, மண்டேலா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களை தயாரித்த Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் தி டெஸ்ட் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார். மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா இணைந்து முன்னணி நடிக்கும் தி டெஸ்ட் திரைப்படத்திற்கு விராஜ் சின் கோஹில் ஒளிப்பதிவில் TS.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இடம்பெற்ற "அக நக" பாடல் உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி மக்கள் மனதை மயக்கிய பாடகி சக்திஸ்ரீ கோபாலன் தற்போது தி டெஸ்ட் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 

கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக உருவாகும் தி டெஸ்ட் படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என PAN INDIA படமாக வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தி டெஸ்ட் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக ஆயுத எழுத்து & ரங் தே பசந்தி ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தி டெஸ்ட் படத்தில் சித்தார்த் மற்றும் மாதவன் இணைந்து நடிக்கின்ற நிலையில், ரன் மற்றும் ஆயுத எழுத்து படங்களைத் தொடர்ந்து மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மினும் மூன்றாவது முறையாக தி டெஸ்ட் படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மீரா ஜாஸ்மின் தி டெஸ்ட் திரைப்படத்தில் இணைவது குறித்து படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
 

Happy to welcome on board #theTEST🏏 the super talented #MeeraJasmine ! ✨@ActorMadhavan #Nayanthara #Siddharth @sash041075 @chakdyn @onlynikil pic.twitter.com/cmNLcbojPG

— Y Not Studios (@StudiosYNot) May 9, 2023

மூன்று மொழியில் டப்பிங்.. ஒரே நேரத்தில் அசால்டாக முடித்து காட்டிய விஷால்.. – 'மார்க் ஆண்டனி' படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ..
சினிமா

மூன்று மொழியில் டப்பிங்.. ஒரே நேரத்தில் அசால்டாக முடித்து காட்டிய விஷால்.. – 'மார்க் ஆண்டனி' படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ..

மெர்சலான லுக்கில் ஷாருக் கான்..! அட்லீ இயக்கும் ‘ஜவான்’ ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு -  வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

மெர்சலான லுக்கில் ஷாருக் கான்..! அட்லீ இயக்கும் ‘ஜவான்’ ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு - வைரலாகும் Glimpse இதோ..

‘பத்து தல’ பட இயக்குனரின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்.. அட்டகாசமான அறிவிப்பை பகிர்ந்த ஏ ஆர் ரஹ்மான்.. – வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

‘பத்து தல’ பட இயக்குனரின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்.. அட்டகாசமான அறிவிப்பை பகிர்ந்த ஏ ஆர் ரஹ்மான்.. – வைரலாகும் அறிவிப்பு இதோ..