"இராவண கோட்டம் ஒரு திருப்புமுனை படமாக இருக்குமா?"- சுவாரஸ்யமாக பதிலளித்த சாந்தனு பாக்யராஜின் சிறப்பு பேட்டி இதோ!

இராவண கோட்டம் படம் குறித்து மனம் திறந்த சாந்தனு பாக்கியராஜ்,shanthnu bhagyaraj about raavana kottam movie | Galatta

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற திரைக்கதை ஆசிரியராகவும் தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராகவும் திகழ்ந்த கே.பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனு பாக்யராஜ் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொடர்ந்து சித்து பிளஸ் 2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், மாஸ்டர் என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் நெட்ஃபிலிக்ஸில் வெளிவந்த பாவக் கதைகள் ஆந்தாலஜி வெப் சீரிஸில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் எனும் எபிசோடில் சாந்தனு பாக்கியராஜ்  சிறப்பாக நடித்திருந்தார். கடைசியாக சாந்தனு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் முருங்கைக்காய் சிப்ஸ். இதுவரை தனது திரைப்பயணத்தில் 14 ஆண்டுகள் கடந்துள்ள சாந்தனு பாக்யராஜ் இதுவரை 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இருப்பினும் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படம் அல்லது மெகா ஹிட் திரைப்படம் என குறிப்பிட்டு சொல்லும் வகையில் சிறந்த திரைப்படங்கள் இருந்ததா? என்றால் அது கேள்விக்குறிதான். இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு பதிலாக தற்போது வெளிவர இருக்கிறது சாந்தனுவின் இராவண கோட்டம் திரைப்படம். தனது முதல் படமான மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் பெற்ற இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் அடுத்த அதிரடி படைப்பாக உருவாகியிருக்கும் இராவண கோட்டம் திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜுடன் இணைந்து இளையத் திலகம் பிரபு மற்றும் கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ள இராவண கோட்டம் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பக்கா கிராமத்து கதைக்களத்தில் தயாராகி இருக்கும் இராவண கோட்டம் திரைப்படம் வருகிற மே 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் இராவணக் கோட்டம் படக்குழுவினர் சிறப்பு பேட்டி அளித்தனர். அந்த வகையில் நடிகர் சாந்தனு உடன் உரையாடும்போது, இராவண கோட்டம் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போதே பெரிய நம்பிக்கை கொடுக்கிறது. சாந்தனு சாரின் ஒரு வித்தியாசமான மற்றும் பயங்கரமான ஒரு POWER PACKED-ஆக தான் இருக்கிறது. எனவே இந்த திரைப்படம் உங்களுக்கு ஒரு திருப்புமுனை படமாக இருக்குமா? என கேட்டபோது, “அதை படம் பார்த்து நீங்கள் தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு படமும் ஒவ்வொருத்தரும் இது ஒரு திருப்புமுனை படமாக இருக்குமா? என்ற நம்பிக்கையில் தான் பணியாற்றுகிறார்கள். மக்கள் தான் பார்த்து முடிவு எடுக்க வேண்டும். ஆனால் கட்டாயமாக எனது கரியரில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். ஒரு தரமான படமாக இருக்கும்… எல்லோருக்குமே! எதையாவது குறிப்பிட்டு இது சரி இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு படமாக இது இருக்காது” என பதிலளித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட சாந்தனு மற்றும் இராவணக் கோட்டம் படக்குழுவின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

சினிமா

"விஜய் ஆண்டனி எதற்கு பயப்படுவார்?"- கலாட்டா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் சுவாரஸ்யமான பதில்! ஸ்பெஷல் வீடியோ இதோ

ராம அவதாரத்தில் பிரபாஸின் ஆதிபுரூஷ்... பிரம்மாண்டமான புது வடிவில் ராமாயணம்! அட்டகாசமான ட்ரெய்லர் இதோ
சினிமா

ராம அவதாரத்தில் பிரபாஸின் ஆதிபுரூஷ்... பிரம்மாண்டமான புது வடிவில் ராமாயணம்! அட்டகாசமான ட்ரெய்லர் இதோ

சினிமா

"அவர் அற்புதமானவர்... எல்லா சந்தோஷங்களுக்கும் தகுதியானவர்!"- முன்னாள் காதல் மனைவி சமந்தா பற்றி பேசிய நாக சைதன்யா!