ராம அவதாரத்தில் பிரபாஸின் ஆதிபுரூஷ்... பிரம்மாண்டமான புது வடிவில் ராமாயணம்! அட்டகாசமான ட்ரெய்லர் இதோ

பிரபாஸின் ஆதிபுரூஷ் பட ட்ரெய்லர் வெளியீடு,prabhas in adipurush movie trailer out now | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் பிரபாஸின் ஆதிபுரூஷ் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் மிகப் பிரபலமடைந்த நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்கள் கலமையான விமர்சனங்களை பெற்றதோடு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தன. இதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதில் குறிப்பாக கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் அதிரடி படமான சலார் படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

தொடர்ந்து சயின்ஸ் பிக்சன் ஆக்சன் திரைப்படமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் ப்ராஜெக்ட் கே படத்திலும் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். ப்ராஜெக்ட் கே படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே ராமாயணத்தை கலைக்களமாக கொண்டு பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் தான் ஆதிபுரூஷ். ராகவா எனும் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்க ஜானகியாக சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனான் நடித்துள்ளார். மேலும் மிரட்டலான ராவணன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் நடிக்க, லட்சுமணன் கதாபாத்திரத்தில் சன்னி சிங் மற்றும் அனுமான் கதாபாத்திரத்தில் தேவதத்தா நாகே ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ள ஆதிபுரூஷ் படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்து தேசிய விருது பெற்ற தன்ஹாஜி திரைப்படத்தின் இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஆதிபுரூஷ் திரைப்படத்தை T-SERIES FILMS மற்றும் RETROPHILES ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்ட படைப்பாக பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த ஆதிபுரூஷ் படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளுக்காகவே கோடிக்கணக்கில் செலவிடப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ஆதிபுரூஷ் படத்தின் டீசர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. பார்ப்பதற்கு பொம்மை படம் போல் இருப்பதாகவும் சோட்டா பீம் கார்ட்டூனோடு ஒப்பிட்டும் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த ஆதிபுரூஷ் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்த படக்குழு படத்தின் CG பணிகளுக்காக கூடுதலாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் ஒதுக்கி நல்ல OUTPUTக்காக மெனக்கெட்டனர். தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஆதிபுருஷ் திரைப்படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. அந்த ட்ரெய்லரை கீழே உள்ள லிங்க் காணலாம்.
 

நான் என்னை DIRECT பண்ணும்போது சில PROBLEMS தெரிஞ்சுது!- பிச்சைக்காரன் 2 பட அனுபவத்தை முதல் முறை பகிர்ந்த விஜய் ஆண்டனி!
சினிமா

நான் என்னை DIRECT பண்ணும்போது சில PROBLEMS தெரிஞ்சுது!- பிச்சைக்காரன் 2 பட அனுபவத்தை முதல் முறை பகிர்ந்த விஜய் ஆண்டனி!

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 பட அட்டகாசமான புது ட்ரீட்... சர்ப்ரைஸாக வந்த ஸ்பெஷல் GLIMPSE இதோ!
சினிமா

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 பட அட்டகாசமான புது ட்ரீட்... சர்ப்ரைஸாக வந்த ஸ்பெஷல் GLIMPSE இதோ!

வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜு போல் பேசி கஸ்டடி பட விழாவை அதிர வைத்த வெங்கட் பிரபு... சோசியல் மீடியாவில் ட்ரண்டாகும் கலக்கல் வீடியோ இதோ!
சினிமா

வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜு போல் பேசி கஸ்டடி பட விழாவை அதிர வைத்த வெங்கட் பிரபு... சோசியல் மீடியாவில் ட்ரண்டாகும் கலக்கல் வீடியோ இதோ!