"சினிமா என்றைக்கோ என்னை தூக்கி போட்டிருக்கலாம்!"- தன் திரைப்பயணத்தின் 14வருட போராட்டம் குறித்து பேசிய சாந்தனு! வீடியோ இதோ

தன் 14வருட திரைப்பயண போராட்டம் குறித்து பேசிய சாந்தனுவின் வீடியோ,shanthnu bhagyaraj about struggles in his 14 years of cinema journey | Galatta

தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சாந்தனு நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் ராவண கோட்டம். மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்துள்ள ராவணக்கோட்டம் திரைப்படம் வருகிற மே 12-ம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கிட்டத்தட்ட தனது திரைப்பயணத்தில் 14 ஆண்டுகளை கடந்து 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிளாக்பஸ்டர் ஹிட் என சொல்லும் அளவிற்கோ ஆகச் சிறந்த திரைப்படம் எனும் சொல்லும் அளவிற்கோ நல்ல படங்கள் சாந்தனுவின் திரைப்பயணத்தில் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனவே இந்த இரு விஷயங்களையும் இராவண கோட்டம் திரைப்படம் பூர்த்தி செய்யும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் பிரத்யேக பேட்டியளித்த நடிகர் சாந்தனுவிடம், "பாக்கியராஜ் அவர்கள் ஒரு பெரிய இயக்குனர் ஒரு பெரிய திரைக்கதை எழுத்தாளர் என புகழ்பெற்ற ஒருவர் அவருடைய மகனான சாந்தனு அவர்களுக்கு இன்னும் அதற்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லையோ? என ஒரு பேச்சு போய்க் கொண்டே இருக்கிறதே இது எப்போதாவது உங்கள் மீது ஒரு அழுத்தத்தை கொடுத்திருக்கிறதா?" என கேட்டபோது, 

"ஆமாம் அந்த ஒரு அழுத்தம் இருக்கிறது. நாம் எப்போதுமே ஒப்பிடப்படுகிறோம். இப்படி ஒரு நட்சத்திரத்தின் குழந்தையாக இருக்கும் போது நமக்கு முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் கிடைத்து விடும், இசை வெளியீட்டு விழாவுக்கான பாஸ்கள் கிடைத்து விடும், ஒரு தயாரிப்பாளரை போய் பார்க்க வேண்டும் என்றால்,  “பாக்கியராஜ் அவர்களின் பையன் வருகிறார்” என்று அது ஒரு விசிட்டிங் கார்டாக இருக்கும். ஆனால் அது சாந்தனு பாக்கியராஜ் நடிக்கும் என்ற ஒரு தலைப்பாக மாறவே மாறாது. இன்று வரைக்கும் அது மாறியதே இல்லை. வெளியில் யார் என்ன நினைத்தாலும் இந்த அழுத்தம் எல்லாம் இருக்கிறது. அந்தப் பெயரில் நமக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. சினிமாவை பொருத்தவரைக்கும் நாம் யார் எந்த வீட்டில் இருந்து வந்திருக்கோம் என்பதெல்லாம் முக்கியமே இல்லை.” என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய சாந்தனு, “தமிழ் மக்களை பொருத்தவரைக்கும் நீங்கள் யார் என்ன என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள் திறமை இருக்கிறதா? உங்கள் கன்டென்ட் நன்றாக இருக்கிறதா? உங்களை ஏற்றுக் கொள்வார்கள். நாம் இன்னாருடைய குடும்பம் என்றெல்லாம் வரும்போது அதை எல்லாம் பார்க்கவே மாட்டார்கள். பார்க்கும்போது தெரியும் அவ்வளவுதான். அதைத் தாண்டி ஜெயிப்பது என்பது நம்மளுடைய முயற்சிதான். எனவே அந்த அழுத்தத்தை எல்லாம் தாண்டி வரும்போது எங்களுக்கு இன்னும் கூடுதல் உழைப்பு இருக்கும். இவ்வளவு எல்லாம் வைத்துக் கொண்டு நான் உள்ளே போராடிக் கொண்டிருக்கிறேன் என்றால், எதுவுமே இல்லாமல் வெளியில் எத்தனை பேர் போராடிக் கொண்டிருப்பார்கள். அந்த விதத்தில் நான் அதிர்ஷ்டம் சாலி என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இப்போது கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிவிட்டது சினிமா என்றைக்கோ என்னை தூக்கி போட்டு இருக்கலாம். ஆனால் இப்போதும் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.” என தெரிவித்துள்ளார். சாந்தனு பாக்கியராஜின் அந்த முழு பேட்டி இதோ…
 

ராம அவதாரத்தில் பிரபாஸின் ஆதிபுரூஷ்... பிரம்மாண்டமான புது வடிவில் ராமாயணம்! அட்டகாசமான ட்ரெய்லர் இதோ
சினிமா

ராம அவதாரத்தில் பிரபாஸின் ஆதிபுரூஷ்... பிரம்மாண்டமான புது வடிவில் ராமாயணம்! அட்டகாசமான ட்ரெய்லர் இதோ

சினிமா

"அவர் அற்புதமானவர்... எல்லா சந்தோஷங்களுக்கும் தகுதியானவர்!"- முன்னாள் காதல் மனைவி சமந்தா பற்றி பேசிய நாக சைதன்யா!

'மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை!'- முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அறிக்கை இதோ!
சினிமா

'மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை!'- முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அறிக்கை இதோ!