"இந்த பிச்சைக்காரன HANDLE பண்றது கஷ்டமா இருந்ததுசு!"- பார்ட் 1க்கும்- 2க்கும் என்ன வித்தியாசம்?ரகசியங்களை உடைத்த விஜய் ஆண்டனி! வைரல் வீடியோ

பிச்சைக்காரன் பாகம் 1 - 2 இடையிலான வித்தியாசம் பற்றி பேசிய விஜய் ஆண்டனி,vijay antony about difficulties between pichaikkaran 1 and 2 movies | Galatta

தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக திகழ்ந்த விஜய் ஆண்டனி பின்னர் “நான்” திரைப்படத்திலிருந்து நடிகராக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து நடிகர் , தயாரிப்பாளர் , படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வந்த விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். முன்னதாக விஜய் ஆண்டனி நடித்துள்ள, காக்கி, அக்னி சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன், ரத்தம், வள்ளி மயில் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் விஜய் ஆண்டனி தனது விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் தான் பிச்சைக்காரன் 2.

கடந்த சில மாதங்களுக்கு முன் மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த விஜய் ஆண்டனி பின்னர் சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது பூரண குணமடைந்து மீண்டு வந்துள்ளார். விஜய் ஆண்டனி உடன் இணைந்து காவியா தப்பர் கதாநாயகியாக நடிக்க, ராதா ரவி, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு, YG.மகேந்திரன் ஆகியோர் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில், முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே படத்தொகுப்பும் செய்து இசையமைத்துள்ளார்.  வருகிற மே 19ஆம் தேதி பிச்சைக்காரன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற விஜய் ஆண்டனி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “பிச்சைக்காரன் பார்ட் 1 - பார்ட் 2 இடையிலான வித்தியாசங்கள்” குறித்த ருசிகர தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், 

“பிச்சைக்காரன் 1 படத்தை பார்த்தீர்கள் என்றால் ரொம்பவும் ரியாலிட்டியில் ஒரு பெரிய பணக்காரன் முதல் REEL-லேயே படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே பிச்சைக்காரன் ஆகி விடுகிறார். அவனை கையாள்வது மிகவும் ஈசியாக இருந்தது. லொகேஷன்களும் பார்த்தீர்கள் என்றால் ரொம்ப கஷ்டமாக இல்லை. பாலத்திற்கு அடியில் பாண்டிச்சேரியில் என ஷூட் செய்து முடித்து விட்டோம். பிச்சைக்காரன் 2 அப்படி கிடையாது. இந்த பிச்சைக்காரன் இந்தியாவிலேயே ஏழாவது பணக்காரனாக இருப்பவன் என்பதால் அவனை கையாளுவது கொஞ்சம் கடினமாக இருந்தது. கஷ்டம் என்றால் தயாரிப்பு செலவு மாதிரி அதேபோல் பிச்சைக்காரன் 1 படத்தில் சில மதிப்புள்ள விஷயங்கள் இருந்திருக்கும் அல்லவா காமெடி இருந்திருக்கும்... மதம் சார்ந்த சில மதிப்புள்ள விஷயங்கள் இருந்திருக்கும்... அது மாதிரியான சில முக்கியமான விஷயங்களை எடுத்து பிச்சைக்காரன் 2 படத்திலும் வைத்திருக்கிறோம் கொஞ்சம் பெரிய அளவில் வைத்திருக்கிறோம். அது பார்ப்பதற்கு கொஞ்சம் வேறு மாதிரி இருக்கும்.” 

என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்ட விஜய் ஆண்டனியின் அந்த ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வின் முழு வீடியோ இதோ…
 

சினிமா

"அவர் அற்புதமானவர்... எல்லா சந்தோஷங்களுக்கும் தகுதியானவர்!"- முன்னாள் காதல் மனைவி சமந்தா பற்றி பேசிய நாக சைதன்யா!

'மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை!'- முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அறிக்கை இதோ!
சினிமா

'மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை!'- முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அறிக்கை இதோ!

நான் என்னை DIRECT பண்ணும்போது சில PROBLEMS தெரிஞ்சுது!- பிச்சைக்காரன் 2 பட அனுபவத்தை முதல் முறை பகிர்ந்த விஜய் ஆண்டனி!
சினிமா

நான் என்னை DIRECT பண்ணும்போது சில PROBLEMS தெரிஞ்சுது!- பிச்சைக்காரன் 2 பட அனுபவத்தை முதல் முறை பகிர்ந்த விஜய் ஆண்டனி!