‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’.. தனுஷிடம் Advice கேட்ட செல்வராகவன்.. - சுவாரஸ்யமான வீடியோ உள்ளே..

நடிகர் தனுஷிடம் Advice கெட்ட செல்வராகவன் - Director Selvaraghavan shares secret advice from Dhanush | Galatta

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும்  இயக்குனர்களின் ஒருவர் செல்வராகவன். 2000 ம் ஆண்டுகளில் இவரது படைப்புகள் எல்லாம் இன்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றது. மெய்சிலிர்க்க வைக்கும் இவரது கற்பனை திறனுக்கு இன்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்றைய தலைமுறையினர் பலர் செல்வராகவனின் படங்களை பாடமாக எடுத்து பலர் அவரை ஒரு தன்னம்பிக்கை மனிதாராக பாவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான ‘நானே வருவேன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இயக்குனரான செல்வராகவன் தற்போது பல படங்களில் நடிகராகவும் அசத்தி வருகிறார். அதன் படி முன்னதாக இவர் நடிப்பில் வெளியான, பீஸ்ட். சாணி காகிதம்,  நானே வருவேன் திரைப்படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. தற்போது செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜீ இயக்ககத்தில் ‘பகாசூரன் திரைப்படம் வரும் பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படம் குறித்தும் படத்தில் நடிப்பது குறித்தும் மேலும் அவரது வரும் கால திரைப்படங்கள், கடந்து வந்த திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு  பகிர்ந்து கொண்டார். இதில் படங்களில் நடிப்பது குறித்து தனுஷ் அவர்களிடம் எதவாது அறிவுரை கேட்டீர்களா? என்ற கேள்விக்கு,

“ஒரு விஷயம் தான் அவரிடம் கேட்டேன். நிறைய நேரம் படப்பிடிப்பு தளங்களில் என்னோடு காட்சி முடிந்தது சும்மா இருக்க வேண்டியதா இருக்கு.. அந்த நேரத்தை எப்படி கடப்பது. அதை என்ன பண்ணனும். னு கேட்டேன்..அதற்கு அவர் சில விஷயங்கள் சொன்னார்.  அது எங்களுக்குள்ளே ரகசியமாகவே இருக்கட்டும் .. அதை ஒருநாள் சொல்றேன்” என்றார். மேலும் தனுஷ் தயாரிப்பாளர் தாணு கூட்டணி தொடர்பான  அறிவிப்பு விரைவில் வரும் என்றார் செல்வராகவன்

தனுஷ் -  செல்வராகவன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கூட்டணி. பிரபல திரை இயக்குனரின் மகன்களான இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு துறையை தேர்ந்தெடுத்து மிகப்பெரிய உச்சம் பெற்றவர்கள் செல்வராகவன் – தனுஷ். காதல் கொண்டேன், புதுபேட்டை, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன, நானே வருவேன் என்று தனுஷும் செல்வராகவனும் இணைந்த திரைப்படங்கள் ஒரு போதும் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்ததில்லை. ஒவ்வொரு முறையும் புது புது வித்யாசமான கதைக்களத்தை தனுஷை அணுகி அதில் வெளியாகும் திரைப்படம் திரையுலகில் மிகப்பெரிய திருப்பத்தை கொடுக்கும். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படங்கள் அனைத்தும் தனுஷ் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படங்களாகும். இவரது கூட்டணிக்கே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது கூட்டணியில் அடுத்த திரைப்படம் எப்போது என்ற ஆவல் தொடர்ந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் செல்வராகவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

உலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த ‘டாடா’ படக்குழுவினர்.. நெகிழ்ச்சியில் கவின்.. – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

உலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த ‘டாடா’ படக்குழுவினர்.. நெகிழ்ச்சியில் கவின்.. – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

தரமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் தளபதி விஜயின் லியோ.. - அட்டகாசமான அப்டேட்டை பகிர்ந்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்..
சினிமா

தரமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் தளபதி விஜயின் லியோ.. - அட்டகாசமான அப்டேட்டை பகிர்ந்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்..

பா ரஞ்சித் படத்திற்காக அதிரடியில் இறங்கும் மாஸ்டர் நாயகி மாளவிகா – அட்டகாசமான தங்கலான் பட அப்டேட் உள்ளே..
சினிமா

பா ரஞ்சித் படத்திற்காக அதிரடியில் இறங்கும் மாஸ்டர் நாயகி மாளவிகா – அட்டகாசமான தங்கலான் பட அப்டேட் உள்ளே..