"யாதும் ஊரே யாவரும் கேளிர்!"- கவனத்தை ஈர்க்கும் விஜய் ஆண்டனியின் முக்கிய பதிவு! காரணம் இதுதான்

கவனத்தை ஈர்க்கும் விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பதிவு,vijay antony recent tweet about north indians in tamil nadu | Galatta

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கென தனி ஸ்டைலில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்த விஜய் ஆண்டனி அவர்கள், தொடர்ந்து “நான்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார். அடுத்தடுத்து “சலீம்” & “இந்தியா பாகிஸ்தான்” என இவரது திரைப்படங்கள் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற, தொடர்ந்து கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக “பிச்சைக்காரன்”, “சைத்தான்”, “எமன்”, “காளி”, “திமிரு புடிச்சவன்”, “கொலைகாரன்” என விஐய் ஆண்டனியின் திரைப்படங்களுக்கு வரவேற்பு இருப்பது போலவே அவரது படங்களின் டைட்டில்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் கடைசியாக விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த “கோடியில் ஒருவன்” திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது.

இதனை அடுத்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக பல திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. அதில் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன், இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்துள்ள காக்கி, மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.

முன்னதாக இயக்குனர் பாலாஜி K குமார் இயக்கத்தில் திரில்லர் படமாக தயாராகியுள்ள கொலை, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன், தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் அதிரடியான படமாக தயாராகியுள்ள ரத்தம் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் வள்ளி மயில் ஆகிய திரைப்படங்களிலும் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்த திரைப்படங்களும் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக தனது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து காவியா தப்பர் கதாநாயகியாக நடிக்க, ராதா ரவி, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு, YG.மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே படத்தொகுப்பும் செய்து இசையமைக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி அவர்கள் முகத்தில் மூக்கு மற்றும் தாடை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி அவர்கள் தற்போது உடல்நிலை தேறி வருகிறார். வெகு விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் முதல் 4 நிமிட காட்சியை ஸ்னீக் பீக் ட்ரெய்லராக படக்குழுவினர் வெளியிட்டனர். அட்டகாசமான இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது தமிழ் நாட்டில் வட மாநிலத்தவர்களின் வருகையும் ஆதிக்கமும் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 
"வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும், நம்மைப் போல் தன் குடும்பத்தை காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன் தான்! 
யாதும் ஊரே யாவரும் கேளிர் 
ANTI BIKILI"

என பதிவிட்டுள்ளார். விஜய் ஆண்டனி இந்த பதிவு தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பதிவு இதோ…
 

வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

ANTI BIKILI

— vijayantony (@vijayantony) February 12, 2023

ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்.. - சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த பிரபல Rap Singer யோகி பி .. வீடியோ உள்ளே..
சினிமா

ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்.. - சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த பிரபல Rap Singer யோகி பி .. வீடியோ உள்ளே..

ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட ரொமான்டிக்கான முதல் பாடல்… செம்ம ஸ்டைலான பாடாத பாட்டெல்லாம் ப்ரோமோ இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட ரொமான்டிக்கான முதல் பாடல்… செம்ம ஸ்டைலான பாடாத பாட்டெல்லாம் ப்ரோமோ இதோ!

அஜித் குமாரின் அதிரடியான துணிவு பட புது சர்ப்ரைஸ்... ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த ஸ்பெஷல் ட்ரீட் இதோ!
சினிமா

அஜித் குமாரின் அதிரடியான துணிவு பட புது சர்ப்ரைஸ்... ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த ஸ்பெஷல் ட்ரீட் இதோ!