தரமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் தளபதி விஜயின் லியோ.. - அட்டகாசமான அப்டேட்டை பகிர்ந்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்..

தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் அப்டேட்டை பகிர்ந்த ஆக்ஷன் கிங் அர்ஜுன் -  Thalapathy vijay leo movie Update from Action king arjun | Galatta

தமிழ் சினிமாவில் பல தாசப்தங்களாக மக்கள் மனதில் நெருக்கமான ஹீரோ வாக இருந்து வருபவர் அர்ஜுன். அதிரடி சண்டை காட்சிகளில் புகழ் பெற்றதால் மக்களால் ஆக்ஷன் கிங் என்றழைக்கப்படுபவர். சமீபத்தில் சிறப்பான குணசித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அர்ஜுன் வில்லனாகவும் குணசித்திர தோற்றத்தையும் மிக ஈடுபாடுடன் நடிப்பவர். அதற்கே தனி ரசிகர்கள் உண்டு. மங்காத்தா, இரும்பு திரை, ஹீரோ, கடல் போன்ற படங்கள் அர்ஜுனின் வேறு ஒரு நடிப்பு திறனை காட்டியிருக்கும் அந்த வகையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ திரைப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களை வேறு மாதிரியான கொண்டாட்டத்திற்கு ஆளாக்கியது. தளபதி விஜயுடன் முதல் முதலில் திரையில் நடிக்க போகும் அர்ஜுன் கதாபாத்திரம் எந்தளவு இருக்க போகின்றது என்ற எதிர்பார்ப்பு பட அறிவிப்பிலிருந்தே இருக்கின்றது.

master actress malavika mohanan shares pa ranjith thangalan movie update

இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் போரூர் கெருகம்பாக்கத்தில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 28 அடி உயரமும்  17 அடி அகலம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை கொண்ட ஒரு கோயிலை சமீபத்தில் கட்டியிருந்தார். அந்த கோவிலுக்கு தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் நேரில் சென்று தரிசனம் பெற்றார். இவர் வருகையை உபசரிக்க நடிகர் அர்ஜுன் அந்நிகழ்வில் கலந்து கொண்டார்.  பின் பத்திரிக்கையாளரை சந்தித்த அர்ஜுன் கோவில் சிறப்பம்சம் குறித்தும் மக்கள் வருகை குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் லியோ படத்தில் நடிப்பது குறித்து, “புதுமையா வித்யாசமா படங்கள் கொடுக்க கூடிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. முதல் முதலாக விஜயுடன் நடிக்கவுள்ளேன். வித்யாசமான அருமையான கதை கொண்டது லியோ திரைப்படம்.எனக்கு மக்கள் கொடுத்த ‘அக்ஷன் கிங் என்ற பட்டத்தின் படியே இயக்குனர் அதற்கு தகுந்த கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார். இதற்கு முன்னாடி மக்கள் பார்க்காத கதாபாத்திரத்தில் என்னை இயக்குனர் அறிமுகப்படுத்தவுள்ளார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் மிக மும்முரமாக காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித்குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அட்டகாசமான் அதிரடி காட்சிகளுடன் உருவாகி வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ படக்குழுவினருடன் தளபதி விஜய்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான Surprise Glimpse இதோ..
சினிமா

லியோ படக்குழுவினருடன் தளபதி விஜய்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான Surprise Glimpse இதோ..

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2.. மிரட்டலான முதல் காட்சியை வெளியிட்ட படக்குழு - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2.. மிரட்டலான முதல் காட்சியை வெளியிட்ட படக்குழு - வைரலாகும் வீடியோ இதோ..

விடிவி.. பிரேமம்.. டைட்டானிக்.. காதலர் தினத்தில் ரீ ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன? - அட்டகாசமான பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

விடிவி.. பிரேமம்.. டைட்டானிக்.. காதலர் தினத்தில் ரீ ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன? - அட்டகாசமான பட்டியல் இதோ..