பிக் பாஸ் கவினின் டாடா படக்குழுவினருக்கு லோகேஷ் கனகராஜின் வாழ்த்து! விவரம் உள்ளே

பிக் பாஸ் கவினின் டாடா படக்குழுவினருக்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து,director lokesh kanagaraj congratulates kavin and dada crew success | Galatta

தனது முதல் படமாக வெளிவந்த மாநகரம் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் திருப்பிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி உடன் கைதி படத்தில் இணைந்தார். கதாநாயகி, பாடல்கள் இல்லாத படமாக வெளிவந்த கைதி திரைப்படம் விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து தனது மூன்றாவது திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் கைகோர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா காலகட்டத்தில் விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளையும் தாண்டி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இந்த நிலையில் தனது நான்காவது படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் உடன் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ். உலக நாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஃபேன் பாய் சம்பவமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் ஆல் டைம் ரெகார்ட்டாக மெகா ப்ளாக் பாஸ்டர் ஹிட்டாகி வசூலில் சாதனை படைத்தது. இந்த வரிசையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருந்த தளபதி 67 திரைப்படம் ரசிகர்களிடையே எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளிவந்த தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் ப்ரோமோவான லியோ - ப்ளடி ஸ்வீட் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

மீண்டும் தளபதி விஜய் உடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக இணைந்திருக்கும் லியோ திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் ஆகியோருடன் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கலை இயக்குனர் N.சதீஷ்குமாரின் கலை இயக்கத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

வருகிற அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட, கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள டாடா படக்குழுவினருக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இயக்குனர் கணேஷ்.கே.பாபு இயக்கத்தில் பிக் பாஸ் போட்டியாளரும் பிரபல நடிகருமான கவின் கதாநாயகனாக நடித்துள்ள டாடா திரைப்படத்தில், அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் கே.பாக்கியராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் ஆகியோர் டாடா படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு எழில் அரசு.K ஒளிப்பதிவில், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். 

அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் நல்ல ஃபீல் குட் திரைப்படமாக டாடா திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “டாடா திரைப்படம் குறித்து நல்ல விமர்சனங்களை நிறைய கேட்கிறேன் வாழ்த்துக்கள் கவின்..  டாடா திரைப்படத்தின் மொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த பதிவு இதோ…
 

Hearing a lot of positive things about this film #Dada congrats da @Kavin_m_0431! Wishing all the very best to the entire team of #Dada 👍🏼@aparnaDasss @JenMartinmusic @OlympiaMovies @ganeshkbabu @Ezhil_DOP @APVMaran @editorkathir

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 13, 2023

சினிமா

"கலை ஜனநாயகத்தின் தூண்!"- குலு குலு படம் மீதான சென்சார் குழுவின் செயலுக்கு இயக்குனர் ரத்னகுமார் கண்டனம்! விவரம் உள்ளே

கோலாகலமாக நடைபெற்ற சர்தார் பட இயக்குனர் PSமித்ரனின் திருமணம்! குவியும் வாழ்த்துகள்
சினிமா

கோலாகலமாக நடைபெற்ற சர்தார் பட இயக்குனர் PSமித்ரனின் திருமணம்! குவியும் வாழ்த்துகள்

தளபதி விஜயின் லியோ படத்தில் இணைவதை உறுதி செய்த பிரபல பிக்பாஸ் நடிகை... வைரலாகும் புகைப்படத்தால் எதிர்பார்ப்பு! விவரம் இதோ
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்தில் இணைவதை உறுதி செய்த பிரபல பிக்பாஸ் நடிகை... வைரலாகும் புகைப்படத்தால் எதிர்பார்ப்பு! விவரம் இதோ