திருச்சிற்றம்பலம் பட இயக்குனர் மித்ரன் R ஜவஹரின் அடுத்த அதிரடி படைப்பு... புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

மித்ரன் R ஜவஹரின் அரியவன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,director mithran r jawahar next movie ariyavan first look poster | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் மித்ரன் R ஜவஹர் நடிகர் தனுஷின் யாரடி நீ மோகினி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அனைத்து வயது ரசிகர்களும் கொண்டாடிய யாரடி நீ மோகினி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அடுத்தடுத்து நடிகர் தனுஷ் உடன் கைகோர்த்த இயக்குனர் மித்ரன் R ஜஹகர் இயக்கத்தில் வெளிவந்த குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. பின்னர் ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தை இயக்கிய மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த முதல் திரைப்படம் ZEE 5 தளத்தில் நேரடியாக ரிலீஸாகி பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

இந்த வரிசையில் கடைசியாக மீண்டும் நடிகர் தனுஷ் உடன் இணைந்த இயக்குனர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில் உருவான திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் கொண்டாடப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தனது திரைப்பயணத்தில் முதல்முறையாக இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் மாதவனுடன் அடுத்த படத்தில் இணைவதாக கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு இயக்குனர் மித்ரன் R ஜவஹர் அறிவித்தார். மீடியா ஒன் குளோபல் என்டர்டைன்மென்ட் லிமிடெட் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு “அதிர்ஷ்டசாலி” என பெயரிடப்பட்டுள்ளது. “அதிர்ஷ்டசாலி” திரைப்படத்தில் நடிகர் மாதவனுடன் இணைந்து ஷர்மிளா மந்த்ரே மற்றும் கீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். “அதிர்ஷ்டசாலி” திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இயக்குனர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில் அடுத்து வெளிவர தயாராகி வரும் திரைப்படம் அரியவன். நடிகர் ஈஷான் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் அரியவன் திரைப்படத்தில் நடிகை ப்ராணலி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்கரவர்த்தி, சூப்பர் குட் சுப்பிரமணி, ரவி வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் அரியவன் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமூகத்தில் பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகளுக்கு தீர்வு காணும் விதமாக எடுக்கப்பட்டுள்ள அரியவன் திரைப்படத்திற்கு மாரிச்செல்வன் கதை எழுத, ஜெகா ஜீவன் வசனங்களை எழுதியுள்ளார்.

MGP MASS MEDIA நிறுவனத்தின் தயாரிப்பில் KS.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவில் தியாகராஜன் படத்தொகுப்பு செய்துள்ள அரியவன் திரைப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன், வேத சங்கர் மற்றும் கிரி நந்த் ஆகியோர் இணைந்து இசை அமைத்துள்ளனர். மகேஷ் மேத்யூவின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கும் அரியவன் திரைப்படத்திற்கு நடன இயக்குனர்களாக அசோக் ராஜா மாஸ்டரும் ஷெரீப் மாஸ்டரும் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அரியவன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார். வரும் மார்ச் மாதத்தில் அரியவன் படத்தை வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் அரியவன் திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் குறித்த இதர அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
actor madhavan son vedaant bagged gold and silver medals for swimming

கோலாகலமாக நடைபெற்ற சர்தார் பட இயக்குனர் PSமித்ரனின் திருமணம்! குவியும் வாழ்த்துகள்
சினிமா

கோலாகலமாக நடைபெற்ற சர்தார் பட இயக்குனர் PSமித்ரனின் திருமணம்! குவியும் வாழ்த்துகள்

தளபதி விஜயின் லியோ படத்தில் இணைவதை உறுதி செய்த பிரபல பிக்பாஸ் நடிகை... வைரலாகும் புகைப்படத்தால் எதிர்பார்ப்பு! விவரம் இதோ
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்தில் இணைவதை உறுதி செய்த பிரபல பிக்பாஸ் நடிகை... வைரலாகும் புகைப்படத்தால் எதிர்பார்ப்பு! விவரம் இதோ

“லேடி சூப்பர் ஸ்டார் என்பதில் தான் உடன்பாடில்லை!”- நயன்தாரா குறித்து பரவும் சர்ச்சைகளுக்கு மாளவிகா மோகனன் விளக்கம்!
சினிமா

“லேடி சூப்பர் ஸ்டார் என்பதில் தான் உடன்பாடில்லை!”- நயன்தாரா குறித்து பரவும் சர்ச்சைகளுக்கு மாளவிகா மோகனன் விளக்கம்!