திருச்சிற்றம்பலம் வெற்றிக்கு பின் அடுத்த படத்தை அறிவித்த மித்ரன் R ஜவஹர்!- ஹீரோ யார் தெரியுமா? விவரம் உள்ளே

மித்ரன் ஜவஹரின் அடுத்த படத்தில் மாதவன் இணைந்துள்ளார்,Mithran jawahar next movie with madhavan official announcement | Galatta

இயக்குனர் செல்வராகவன் அவர்களின் உதவி இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இயக்குனர் மித்ரன் R ஜவஹர் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். தெலுங்கில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷ் மற்றும் திரிஷா இணைந்து நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஆடவெரி மாட்டலக்கு அர்த்தலே வேருலே படத்தின் தமிழ் ரீமேக்காக நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த யாரடி நீ மோகினி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் மித்ரன் R ஜவஹர்.

தொடர்ந்து தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த ஆர்யா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தனுஷ் நடித்த குட்டி திரைப்படத்தையும், தெலுங்கு நடிகர் ராம் நடிப்பில் வெளிவந்து ஹிட்டடித்த ரெடி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் திரைப்படத்தையும் அடுத்தடுத்து இயக்கிய இயக்குனர் மித்ரன் R ஜவஹர், ஆறு வருட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடித்த தட்டத்தின் மறையது படத்தின் தமிழ் ரீமேக்காக மீண்டும் ஒரு காதல் கதை படத்தை இயக்கினார்.

இதனை அடுத்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மித்ரன் R ஜவஹர் இயக்கிய மதில் திரைப்படம் நேரடியாக ZEE 5 தளத்தில் ரிலீஸ் ஆனது. கடைசியாக இயக்குனர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முன்னணி தொடர்பில் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் நடிகர் தனுஷின் முந்தைய திரைப்படங்களான யாரடி நீ மோகினி மற்றும் வேலையில்லா பட்டதாரி ஆகிய திரைப்படங்களின் வெற்றி ஃபார்முலாவில் அனைத்து வயது ரசிகர்களும் கொண்டாடும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் மித்ரன் R ஜவஹர் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது. இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் மாதவன் இயக்குனர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மீடியா ஒன் குளோபல் என்டர்டைன்மென்ட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் மாதவனுடன் இணைந்து ஷர்மிளா மந்த்ரே மற்றும் கீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

முதல்முறையாக இயக்குனர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில் நடிகர் மாதவன் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு “அதிர்ஷ்டசாலி” என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிர்ஷ்டசாலி திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வரும் நாட்களில் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தனது TWITTER பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள இயக்குனர் மித்ரன் R ஜவஹர், “திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு எனது அடுத்த திரைப்படத்தில் எனது ஃபேவரட் நடிகரும் மிகவும் திறமை வாய்ந்த நடிகருமான மாதவன் அவர்களை இயக்குகிறேன். இத்திரைப்படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இயக்குனர் மித்ரன் R ஜவஹரின் அந்த பதிவு இதோ…
 

After the blockbuster success of Thiruchitrambalam, kicking off my next directorial project starring uber-talented, and fan-favourite @ActorMadhavan. Produced by the acclaimed Mediaone Global Entertainment. Let's Roll! 🔥@Mediaone_M1 @sharmilamandre

— Mithran R Jawahar (@MithranRJawahar) February 11, 2023

பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, AK62 வரிசையில் லைகா ப்ரொடக்ஷன்ஸின் அடுத்த படைப்பு!- இயக்குனர் யார் தெரியுமா? விவரம் உள்ளே
சினிமா

பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, AK62 வரிசையில் லைகா ப்ரொடக்ஷன்ஸின் அடுத்த படைப்பு!- இயக்குனர் யார் தெரியுமா? விவரம் உள்ளே

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் - லியோ பட நடிகர் இணைந்து நடித்த புதிய படம்... அசத்தலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் - லியோ பட நடிகர் இணைந்து நடித்த புதிய படம்... அசத்தலான ட்ரெய்லர் இதோ!

சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் பிரம்மாண்டமான தங்கலான்... பார்வதி பகிர்ந்த கவனத்தை ஈர்க்கும் புது GLIMPSE இதோ!
சினிமா

சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் பிரம்மாண்டமான தங்கலான்... பார்வதி பகிர்ந்த கவனத்தை ஈர்க்கும் புது GLIMPSE இதோ!