ஈடு இணையற்ற இயக்குனராக இந்திய திரை உலகிற்கு ஆகச் சிறந்த திரைப்படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள். தனது படைப்புகளுக்காக இதுவரை ஆறு தேசிய விருதுகள் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.

இயக்குனராக கொடிகட்டி பறந்த பாரதிராஜா அவர்கள் தற்போது நடிகராகவும் அசத்தலான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் ரிலீஸான நடிகர் தனுஷின்  திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பாரதிராஜா அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

இதனிடையே திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன

இந்நிலையில் பாரதிராஜாவின் தற்போதைய உடல்நிலை குறித்த அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா அவர்கள் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகுந்த அக்கறையோடு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும்” தெரிவித்துள்ளனர். இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை இதோ…
 

Medical Update on Director Bharathiraja, who is currently admitted at MGM Healthcare pic.twitter.com/ZTMWolNSZW

— MGMHealthcare (@MGMHealthcare) August 29, 2022