உலக அளவில் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்களின் இதயங்களில் இசைப்புயலாக மையம் கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையில் இந்த ஆண்டு(2022) வரிசையாக அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர உள்ளன. அந்த வகையில் சீயான் விக்ரம் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த கோப்ரா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்-சிலம்பரசன்.TR-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் மூன்றாவது படமாக தயாராகி இருக்கும் வெந்து தணிந்தது காடு வருகிற செப்டம்பர் 15ஆம் தேதியும், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதியும் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகின்றன.

இதனிடையே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை கௌரவித்துள்ள கனடா அரசாங்கம், கனடாவின் மார்க்காம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய தெருவிற்கு "A.R.Rahman" என பெயர் சூட்டியுள்ளது. முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு ஏற்கனவே கனடாவின் மார்க்காம் நகரில் உள்ள ஒரு தெருவிற்கு "Allah Rakha Rahman Street" என பெயர் சூட்டப்பட்ட நிலையில் மீண்டும் மற்றொரு தெருவிற்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை சூட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்ட தெருவில் நடைபெற்ற இந்த பெயர் சூட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் அந்நகரத்தின் மேயர் ஃப்ரான்க் ஸ்கார்ப்பிட்டி அவர்களையும் கனடா வாழ் மக்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து தனக்கே உரித்தான ஸ்டைலில் “எல்லா புகழும் இறைவனுக்கே” என தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு இதோ…
 

pic.twitter.com/m0DfPUlx9b

— A.R.Rahman (@arrahman) August 29, 2022

Honoured and grateful for this recognition from @cityofmarkham and @frankscarpitti and the people of Canada 🇨🇦 🇮🇳 #arrahmanstreet #markham #canada #infinitelovearr #celebratingdiversity pic.twitter.com/rp9Df42CBi

— A.R.Rahman (@arrahman) August 29, 2022