100 ரசிகர்களுடன் மணாலிக்கு பறந்த விஜய் தேவரகொண்டா.. உற்சாகத்தில் குதூகலித்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ இதோ..

நூறு ரசிகர்களுடன் மணாலிக்கு சுற்றுலா சென்ற வீடியோவை பகிர்ந்த விஜய் தேவரகொண்டா Vijay Devarakonda shares video of his 100 fans on manali trip | Galatta

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திற்கு பின் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பிரபலமடைந்தார். அப்படத்தை தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’, ‘நோட்டா’, ‘டியர் காம்ரேட்’, ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ ஆகிய தொடர் வெற்றி படங்களை கொடுத்து தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். அதன்பின் கடைசியாக அவரது நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவான படம் ‘லைகர்’ குத்துசண்டை அடிப்படையாக உருவான இப்படத்தில் கடின உழைப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார் விஜய் தேவரகொண்டா. ஆனால் படம் அவர் நினைத்த அளவு வரவேற்பு பெறவில்லை. தற்போது விஜய் தேவரகொண்டா இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜன கண மன திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க இருக்கிறார். மேலும் சமந்தாவுடன் ‘குஷி’ படத்திலும் நடித்து வருகிறார்.

விஜய் தேவரகொண்டா வழக்கமாக ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தையடுத்து தனது ரசிகர்களை சர்ப்ரைஸாக நேரில் சந்தித்து பரிசுகளை கொடுப்பதும் அவர்களுடன் நேரம் செலவிடுவதும் வழக்கமாக வைத்து கொள்வார். இந்த செயல்பாட்டிற்கு தேவாரசாண்டா என்று பெயர் வைத்து கடந்த 5 ஆண்டுகளாக செய்து வருகிறார். ஒவ்வொரு முறை இந்த செயல்பாட்டின் போதும் விஜய் தேவரகொண்டாவிற்கு வாழ்த்துகள் வந்து குவியும்.

தனது வாழ்க்கையில் முதல் சுற்றுலா அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து பின் அந்த அனுபவத்தை நான் உங்களுக்கு பரிசாக கொடுக்க விரும்புகிறேன் என்ற சொல்லி  அதன்படி கடந்த ஆண்டு கிருஸ்துமஸ் முன்னிட்டு தேவரசாண்டா செயல்பாட்டின் மூலம் தனது ரசிகர்களில் 100 பேரை தேர்ந்தெடுத்து தனது சொந்த செலவில் விடுமுறை கொண்டாட்டத்திற்காக சுற்றுலா தளமான மணாலி இடத்திற்கு அழைத்து சென்றார். அது தொடர்பான வரவேற்புகளும் வாழ்த்துகளும் விஜய் தேவரகொண்டாவிற்கு வந்தவண்ணம் இருந்தது. தற்போது அந்த சுற்றுலா வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா.

உற்சாகத்துடன் குதூகலித்து கொண்டாடி தீர்த்த ரசிகர்களை சர்ப்ரைஸாக சந்தித்து அவர்களை மேலும் உற்சாகமடைய செய்தார். கண்ணீருடன் தங்களது அனுபவங்களை பகிர்ந்த ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவினை ஆரத்தழுவி நன்றியினை தெரிவித்தனர். இந்த உணர்ச்சிபூர்வமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் விஜய் தேவரகொண்டாவிற்கு வாழ்த்துகளையும் தங்களதுநல்ல கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

“மகான் படத்தின் அந்த பாடல் உருவாக அஜித் தான் காரணம்” - சந்தோஷ் நாராயணன் பகிர்ந்த அட்டகாசமான தகவல் - ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“மகான் படத்தின் அந்த பாடல் உருவாக அஜித் தான் காரணம்” - சந்தோஷ் நாராயணன் பகிர்ந்த அட்டகாசமான தகவல் - ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

‘லியோ’ படப்பிடிப்பு தளத்திலிருந்து புறப்பட்ட இயக்குனர் மிஷ்கின் - லோகேஷ் ஒரு பெரும் வீரன், விஜய் பண்பானவர் .. புகழாரம் சூட்டிய பதிவு இதோ..
சினிமா

‘லியோ’ படப்பிடிப்பு தளத்திலிருந்து புறப்பட்ட இயக்குனர் மிஷ்கின் - லோகேஷ் ஒரு பெரும் வீரன், விஜய் பண்பானவர் .. புகழாரம் சூட்டிய பதிவு இதோ..

“Dress மாத்தும் போது பூரான் இருந்துச்சு” அயலி படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகள் குறித்து பகிர்ந்த படக்குழுவினர் – சுவாரஸ்மான பேட்டி இதோ..
சினிமா

“Dress மாத்தும் போது பூரான் இருந்துச்சு” அயலி படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகள் குறித்து பகிர்ந்த படக்குழுவினர் – சுவாரஸ்மான பேட்டி இதோ..