இனம், மதம், நாடு என்று சர்ச்சையை கிளப்பிய திருமண ஆடை.. அவதூறு பேசியவர்களுக்கு பதிலடி – பாகிஸ்தான் நடிகையின் பதிவு வைரல்..

திருமண ஆடையை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் நடிகை Pakistani actress trolled by her marriage dress her reply goes viral | Galatta

பாகிஸ்தானில் பிரபல நடிகையும் தொலைக்காட்சி பிரபலமுமான  உஷ்னா ஷா சமீபத்தில் கோல்ஃப் வீரரான ஹம்சா அமீனை கடந்த பிப்ரவரி 26 ம் தேதி பிரமாண்டமான முறையில் மணந்தார். வாழ்த்துகளுடன் தம்பதியினரின் புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து திருமணத்தில் உஷ்னா ஷா அணிந்திருந்த சிவப்பு லேஹன்கா விமர்சனத்திற்குள்ளானது. இந்திய கலாசார வடிவில் இருந்த அந்த ஆடையில் உஷ்னா ஷாவின் அழகை பலர் பாராட்டி வந்தனர்.  அதே நேரத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் வர்தா சலீம் வடிவமைத்த இந்த சிவப்பு லேஹங்கா இந்திய திருமண முறையில் உள்ளதாக சிலர் விமர்சித்து அவதூறான கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதனையடுத்து அது விவாத பொருளாக மாறியது. அதே நேரத்தில் விழாக்களில் நடனமாடுவதும் விமர்சனத்திற்குள்ளானது.

மேலும் திருமண நிகழ்சியில் உஷ்னா ஷா நடனமாடுவதை பகிர்ந்து அதில் ஒரு சிலர் , “பாகிஸ்தானுக்கென்று தனி கலாச்சராம் மத வழக்கம் உள்ளது. இந்திய கலாச்சராத்தை பாகிஸ்தானில் திணிக்காதீர்கள். நாம் இஸ்லாமியர்கள் நமது மாண்பில் இதுபோன்ற விஷயங்களையோ இது போன்ற ஆடைகளையோ அனுமதிப்பதில்லை.. எதிர்மறையான எண்ணங்களை பரப்பாதீர்கள்” இது போன்ற பல விமர்சனங்கள் அவதூறுகள் எழுந்த வண்ணம் இருந்தது.

They are fooling people by promoting Indian culture in the name of Pakistani culture.
We shouldn't tolerate it as it spoils our own culture, traditional values ​​and religious values ​​as well.#UshnaShah#جاوید_نہیں_ننگے_تم_ہوئے_ہو pic.twitter.com/1SjuXZTFxr

— Syed Kazim Mehdi Rizvi (@SyedKazimMehdi9) February 27, 2023

இதையடுத்து நடிகை உஷ்னா தனது இன்ச்டாகிராம் ஸ்டோரியில் அவதூறு பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது சிவப்பு லேஹன்கா வுடன் தனது திருமணத்திற்காக இடப்பட்ட மெஹந்தி கொண்ட கையுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன்,

“என் ஆடையில் பிரச்னை இருக்கும் நபர்களுக்கு, நான் உங்களை எனது திருமணத்திற்கு அழைக்கவில்லை. நீங்கள் என் திருமணத்திற்கு செலவும் செய்யவில்லை.  எனது நகைகள், எனது ஜோரா (சிவப்பு லெஹன்கா) முழுவதும் பாகிஸ்தானியுடையது. நான் பாதி ஆஸ்திரியனாக இருந்தாலும் எனது கடவுள் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்.”  என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் இதனையடுத்து அந்த பதிவு வைரலாகி வருகிறது. 

vijay deverakonda shares amazing video of his 100 fans experience during manali trip

தனிப்பட்ட நிகழ்ச்சியில் இது போன்று சர்ச்சைகளையும் கருத்துகளையும் பதிவிடுவது தவறானது. அவரவர் விருப்பத்திற்கேற்ப இருக்கிறார்கள் என்று ஒரு தரப்பினர் உஷ்னா ஷாவிற்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

களைகட்டும் மார்ச் மாதம்.. வரிசையாக வெளியாகும் அட்டகாசமான திரைப்படங்கள் - பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

களைகட்டும் மார்ச் மாதம்.. வரிசையாக வெளியாகும் அட்டகாசமான திரைப்படங்கள் - பட்டியல் இதோ..

“மகான் படத்தின் அந்த பாடல் உருவாக அஜித் தான் காரணம்” - சந்தோஷ் நாராயணன் பகிர்ந்த அட்டகாசமான தகவல் - ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“மகான் படத்தின் அந்த பாடல் உருவாக அஜித் தான் காரணம்” - சந்தோஷ் நாராயணன் பகிர்ந்த அட்டகாசமான தகவல் - ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

‘லியோ’ படப்பிடிப்பு தளத்திலிருந்து புறப்பட்ட இயக்குனர் மிஷ்கின் - லோகேஷ் ஒரு பெரும் வீரன், விஜய் பண்பானவர் .. புகழாரம் சூட்டிய பதிவு இதோ..
சினிமா

‘லியோ’ படப்பிடிப்பு தளத்திலிருந்து புறப்பட்ட இயக்குனர் மிஷ்கின் - லோகேஷ் ஒரு பெரும் வீரன், விஜய் பண்பானவர் .. புகழாரம் சூட்டிய பதிவு இதோ..