ரெடியா மக்களே.. பிச்சைக்காரன் 2 எப்போது.. அட்டகாசமான அப்டேட்டுடன் வந்த விஜய் ஆண்டனி - வைரலாகும் அறிவிப்பு இதோ..

பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட விஜய் ஆண்டனி -  Here is the release date of pichaikkaran 2 | Galatta

தமிழ் சினிமாவில் முக்கிய படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக தனித்து நின்று பின் கதானயகானாக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அட்டகாசமான  கதைகளை  தேர்ந்தெடுத்து நேர்த்தியான படைப்புகளாக மக்களுக்கு கொடுத்து பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் நம்பிக்கை கதாநாயகனாக வளர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி. தற்போது விஜய் ஆண்டனி இசை நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கத்தையும் கையிலெடுத்துள்ளார். அதன் படி அவரது முந்தைய படமான பிச்சைக்காரன் திரைப்படம் கடந்த 2016 வெளியாகி பல மொழிகளில் மிகப்பெரிய அளவு ஹிட் அடித்தது. தற்போது பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி முடித்துள்ளார்  விஜய் ஆண்டனி.

இந்த பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடிகராகவும் இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் மட்டுமல்லாமல் படத்தை அவரே படத்தொகுப்பும் செய்து வருகிறார். சமீபத்தில் ஏற்பட்ட விபதிலிருந்து மீண்டு வந்த விஜய் ஆண்டனி தொடர்ந்து பிச்சைகாரன் 2 படத்திலிருந்து அட்டகாசமான அப்டேட்டுகளை விஜய் ஆண்டனி கொடுத்து வருகிறார். முன்னதாக படத்திலிருந்து முதல் நான்கு நிமிட காட்சியை முன்னோட்டமாக வெளியிட்டார். மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பிச்சைக்காரன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தகவல் முன்னதாக வெளியானது. தற்போது அதனை உறுதி செய்யுமளவு விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பிச்சைக்காரன் 2 படத்தின் வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளார். அவருடைய பதிவின்படி பிச்சைக்காரன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த அறிவிப்புடன் விஜய் ஆண்டனி “துபாயிலிருந்து வரும் மிகப்பெரிய பிச்சைக்காரனை பார்க்க வேண்டுமா? ஏப்ரல் 14 உங்கள் அபிமான திரையரங்குகளில் காணலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து விஜய் ஆண்டனியின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Do you want to see a mass beggar from Dubai 👺
Visit theaters near you on April 14th💣#பிச்சைக்காரன்2 #బిచ్చగాడు2
ANTI BIKILI pic.twitter.com/Qe7MaD5wPQ

— vijayantony (@vijayantony) February 27, 2023

விஜய் ஆண்டனி பிலிம்  கார்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகி வரும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வைத்துள்ளது. மற்றும் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை கைப்பற்றியுள்ளது விஜய் தொலைக்காட்சி மேலும் பிச்சைக்காரன் 2 படத்தை தொடர்து விஜய் ஆண்டனி  தற்போது 'அக்னி சிறகுகள்', 'காக்கி', 'மழை பிடிக்காத மனிதன்', 'வள்ளி மயில்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வேற ரகத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ பட பாடல்கள் -  அட்டகாசமான அப்டேட்டை பகிர்ந்த ஜிவி பிரகாஷ்.. வீடியோ இதோ..
சினிமா

வேற ரகத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ பட பாடல்கள் - அட்டகாசமான அப்டேட்டை பகிர்ந்த ஜிவி பிரகாஷ்.. வீடியோ இதோ..

சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு.. வைரலாகும் மீம்கள்.. - விளக்கமளித்த நடிகர் மாரிமுத்து.. விவரம் இதோ..
சினிமா

சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு.. வைரலாகும் மீம்கள்.. - விளக்கமளித்த நடிகர் மாரிமுத்து.. விவரம் இதோ..

“சம்யுக்தா பற்றி தனுஷ் சொன்னது நடந்துடுச்சு” - வாத்தி பட இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. -  முழு வீடியோ இதோ..
சினிமா

“சம்யுக்தா பற்றி தனுஷ் சொன்னது நடந்துடுச்சு” - வாத்தி பட இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. - முழு வீடியோ இதோ..