வித்யாசமான கெட்டப்பில் பிரபு தேவா.. பஹீரா திரைப்படத்தின் அட்டகாசமான காட்சி.. – வைரலாகும் Sneak peak இதோ..

பஹீரா திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது - Here is the trending Bagheera new sneak peak | Galatta

முதல் படத்திலே அதிகம் சர்ச்சைகளை வாங்கி மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ திரைப்படத்தில் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நிறைய சர்ச்சைகளை திரையுலகில் ஏற்படுத்தினார் ஆதிக் ரவிச்சந்திரன். சர்ச்சைகளுக்கிடையே பார்வையாளர்களை அதிகம் கவர்ந்து மிகப்பெரிய ஹிட் அடித்தது திரிஷா இல்லன்னா நயன்தாரா. அதன் பின் சிலம்பரசன் TR உடன் இணைந்து மிகப்பெரிய அளவு திரைக்கதை அமைத்து பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – முதல் பாகம்’ மிகப்பெரிய தோல்வியை சந்தித்து பெரும் சறுக்கலை சந்தித்தார் ஆதிக் ரவிச்சந்திரன். அதன் பின் இந்தியாவின் தலை சிறந்த நடன கலைஞர், நடிகர் மற்றும் இயக்குனருமான பிரபு தேவாவுடன் இணைந்து ஒரு சைக்கோ த்ரில்லர் படமாக ‘பஹீரா’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தின்  டிரலைர் கடந்த ஆண்டு வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் படம் வெளியாகாமல் இருந்தது. இடையே ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் விஷாலை வைத்து மிக பிரமாண்ட பொருட்செலவில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில்  பஹீரா திரைப்படத்தை மீண்டும் கையில் எடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். அதன்படி  வரும் மார்ச் மாதம் 3 ம் தேதி பஹீரா திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது. மிரட்டலான சைக்கோ திரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் பஹீரா படத்தின் இரண்டாவது டிரைலர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. படம் வெளியாக நான்கு நாள் உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. பிரமாண வேடத்தில் பிரபு தேவா அவருடன் ரம்யா நம்பீசன் மற்றும் பிக் பாஸ் மோகன் வைத்யா ஆகியோர் இருக்கும் காட்சி வெளியாகியுள்ளது. தற்போது இந்த காட்சி ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டு வருகிறது. தொடர்ந்து காட்சிகள் டிரைலர்கள் சர்ச்சையுடன் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பஹீரா திரைப்படம் சர்ச்சையை எழுப்பி வெற்றி பெறுமா? அல்லது தோல்வி பெறுமா என்பதை பம் வெளியானபோது தான் யூகிக்க முடியும்

ஆதிக் ரவிச்சந்திரம் இயக்கத்தில் உருவாகியுள்ள பஹீரா திரைப்படத்தில் வித்தியாசமான பல மிரட்டலான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்துள்ளார் இவருடன் இணைந்து அமைரா டஸ்டர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா செட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய்குமார், நாசர் மற்றும் பிரகதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் செல்வகுமார் SK மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர் மேலும் ரூபன் படத்தொகுப்பு செய்ய கணேசன்.S இசையமைத்துள்ளார். 

சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு.. வைரலாகும் மீம்கள்.. - விளக்கமளித்த நடிகர் மாரிமுத்து.. விவரம் இதோ..
சினிமா

சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு.. வைரலாகும் மீம்கள்.. - விளக்கமளித்த நடிகர் மாரிமுத்து.. விவரம் இதோ..

“சம்யுக்தா பற்றி தனுஷ் சொன்னது நடந்துடுச்சு” - வாத்தி பட இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. -  முழு வீடியோ இதோ..
சினிமா

“சம்யுக்தா பற்றி தனுஷ் சொன்னது நடந்துடுச்சு” - வாத்தி பட இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. - முழு வீடியோ இதோ..

‘லியோ’ பட நடிகர் சஞ்சய் தத்தின் வெறித்தனமான Work out..  ஆச்சர்யத்தில் ரசிகர்கள் - வைரலாகும் மிரட்டலான வீடியோ இதோ..
சினிமா

‘லியோ’ பட நடிகர் சஞ்சய் தத்தின் வெறித்தனமான Work out.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள் - வைரலாகும் மிரட்டலான வீடியோ இதோ..