“வா அசுர வா.. பாடல் இப்படிதான் உருவானது” ஜிவி பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் - முழு வீடியோ இதோ..

அசுரன் படத்தின் பாடல் உருவாக்கம் பற்றி ஜிவி பிரகாஷ் - GV Prakash about director vetrimaaran works on Asuran movie songs | Galatta

தமிழ் சினிமாவில் இயக்குனர் – இசையமைப்பாளர் கூட்டணி  என்று சொன்னால் சிலர் தனித்துவமானவர்களாகவும் சிலர் வெற்றி கூட்டணியாகவும் இருப்பார். இது இரண்டும் சேர்ந்து சம காலத்தில் பயணித்து வருபவர்கள் இயக்குனர் வெற்றிமாறன் - இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் . வெற்றிமாறன் முதல் படமான ‘பொல்லாதவன் திரைப்படத்திலே இணைந்த இந்த கூட்டணி மிகபெரிய வெற்றி பெற்று கவனம் பெற்றது. அதன் பின் தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, அசுரன் ஆகிய படங்களில் இணைந்து கவனம் பெற்றனர். மேலும் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான உதயம், காக்கா முட்டை, லென்ஸ், ஆகிய படங்களுக்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி எந்தளவு பேசப்படுகிறதோ அதே அளவு இந்த கூட்டணிக்கும் ரசிகர் மத்தியில் ஒரு தனி அந்தஸ்து உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமரசன ரீதியாகவும் வெற்றிப்பெற்ற ‘வாத்தி’ திரைப்படத்தின் படமாக்கம் மற்றும் பாடல் உருவான விதம் குறித்து படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி மற்றும் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் ஆகியோர் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இயக்குனர் வெற்றிமாறன் உடன் பணியாற்றும் அனுபவம் அந்த வேலையின் செயல்பாடு எப்படி என்று கேட்கையில்,

"வெற்றிமாறனுடன் வேலை பார்ப்பது மிகவும் எளிதாக இருக்கும், அவர் என் பக்கம் வரவே மாட்டார். அவர் என்னை தொலைபேசியில் அழைத்து, 'ஒரு குத்து பாடல் வேண்டும் இரவு அனுப்பிடுங்கள் என்று கேட்டு வைத்து விடுவார். அதன்பின் இரவில் வாட்ஸ் ஆப்பில் ஒரு ட்யூன் அனுப்புவேன். அவர் அதை கேட்டு ஒரே வார்த்தையில் 'ஓகே' என்று அனுப்புவார்.  அசுரன் படத்தின் போது 'ஜிவி எனக்கு உடம்பு சரியில்லை. படம் முழுதும் நான் பார்பேனானு.. அதனால் என்னால் வரமுடியாது. நீங்கள் முடித்து விட்டு என்னிடம் காட்டுங்கள்' என்றார். அதன்பிறகு அவர் என்னிடம் பேசவில்லை. கடைசி மிக்ஸ் - ல் தான் பார்த்தார்..பார்த்து விட்டு ஒகே.." என்றார். மேலும் தொடர்ந்து " அசுரன் படத்தின் போது என்னை அழைத்து என்னிடம் அசுரன் படத்தின் டிரைலர் உள்ளது. அது வன்முறை நிறைந்ததா இருக்கு.. அதுக்கு ஒரு ராப் பாடல் போல் வேண்டும் என்றார். என்னிடம் டிரைலர் காட்டாமலே இப்படி சொன்னார். நான் அதற்கு நான் டெம்போ பார்க்க வேண்டும் என்றேன். அதன்பின் தான் அந்த ‘Blood bath’ இசை உருவானது.. அந்த பெயரும் வெற்றி தான் சொன்னார்." என்றார் ஜிவி பிரகாஷ் குமார்.

மேலும் இயக்குனர் வெங்கி அட்லூரி மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..

வித்யாசமான கெட்டப்பில் பிரபு தேவா.. பஹீரா திரைப்படத்தின் அட்டகாசமான காட்சி.. – வைரலாகும் Sneak peak இதோ..
சினிமா

வித்யாசமான கெட்டப்பில் பிரபு தேவா.. பஹீரா திரைப்படத்தின் அட்டகாசமான காட்சி.. – வைரலாகும் Sneak peak இதோ..

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது.. உற்சாகத்தில் ரசிகர்கள்..  – சாம் சி எஸ் இசையில் அட்டகாசமான பாடல் இதோ..
சினிமா

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – சாம் சி எஸ் இசையில் அட்டகாசமான பாடல் இதோ..

வேற ரகத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ பட பாடல்கள் -  அட்டகாசமான அப்டேட்டை பகிர்ந்த ஜிவி பிரகாஷ்.. வீடியோ இதோ..
சினிமா

வேற ரகத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ பட பாடல்கள் - அட்டகாசமான அப்டேட்டை பகிர்ந்த ஜிவி பிரகாஷ்.. வீடியோ இதோ..