ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகளை நீக்கிய படக்குழு.. - மாற்றங்களுடன் வெளியான துருவ நட்சத்திரம் ‘ஒரு மனம்’ பாடல்..!

துருவ நட்சத்திரம் படத்தில் நீக்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் விவரம் உள்ளே – aishwarya rajesh oru manam song new version out now | Galatta

வித்யாசமான கதைகளை தனக்கே உரித்தான திரைக்கதையில் கொடுத்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருபவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.  மின்னலே படம் தொடங்கி சமீபத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ வரை திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை முழுமையாக மகிழ்வித்து வருகிறார் கெளதம் மேனன். ஒரு பெரிய நடிகருக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை  இயக்குனர் கௌதம் மேனன் இன்றும் தக்க வைத்து கொண்டு வருகிறார். தற்போது கௌதம் மேனன் இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது திரையுலகில் நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வலம் வரும் கௌதம் மேனன் தற்போது அவர் இயக்கத்தில் நீண்ட நாட்களாக ரிலீஸ்க்கு காத்திருக்கும் துருவ நட்சத்திரம் பட ரிலீஸ் வேலையில் இறங்கியுள்ளார்.  பக்கா ஆக்ஷன் கதைகளமான இப்படத்தில் ஹீரோவாக சீயான் விக்ரம் நடிக்க படத்தின் கதாநாயகிகளாக  ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  இவரது இசையில் முன்னதாக வெளியான ‘ஒரு மனம்’, ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ ஆகிய பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது.

படத்தின் இறுதி பணிகளில் தேவையில்லாத காட்சிகளை நீக்கி திரைக்கதை போக்கில் சுவாரஸ்யம் கூட்டி வருகிறார் இயக்குனர் கௌதம் மேனன். இந்நிலையில் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கப் பட்டுள்ளதாக செய்தி இணையத்தில் வைரலானது. இதனை உறுதி செய்யும் விதத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இடம் பெற்ற ஒரு மனம் பாடல் இணையத்தில் இருந்து அதிகாரப் பூர்வமாக நீக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது படக்குழு ‘ஒரு மனம்’ பாடலின் வீடியோவில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த காட்சிகளை நீக்கி மாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். இதையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வாமாக தெரியவந்துள்ளது. இருந்தும் மாற்றங்களுடன் வெளியான பாடலின் விவரப் பட்டியலில் நடிகர்கள் பெயர் பட்டியலில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் உள்ளது. ஒரு மனம் பாடலில் மட்டும் ஐஸ்வர்யா ராஜேஷை படக்குழு நீக்கியுள்ளதா இல்லை படத்திலிருந்து மொத்தமாக நீக்கியுள்ளதா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.    

ஒன்றாக என்டர்டைன்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டைன்மென்ட் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வரும் வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்பது கூடுதல் தகவல்.

“அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் நாசர்.. – விவரம் உள்ளே..
சினிமா

“அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் நாசர்.. – விவரம் உள்ளே..

ஆஸ்கர் மியூசியத்தில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் ஏ ஆர் ரஹ்மான் – இணையத்தில் ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

ஆஸ்கர் மியூசியத்தில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் ஏ ஆர் ரஹ்மான் – இணையத்தில் ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

ரஜினிகாந்த், கமல் ஹாசன் படங்களில் பணியாற்றிய பிரபலம் காலமானார்.. ஆழ்ந்த சோகத்தில் திரையுலகினர்..
சினிமா

ரஜினிகாந்த், கமல் ஹாசன் படங்களில் பணியாற்றிய பிரபலம் காலமானார்.. ஆழ்ந்த சோகத்தில் திரையுலகினர்..