“ஆர்யா Racer போல கார் ஒட்டுவான்..” சந்தானம் பகிர்ந்த கலகலப்பான தகவல்.. – Exclusive Interview உள்ளே..

நடிகர் ஆர்யா குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த சந்தானம் முழு வீடியோ உள்ளே - Santhanam about actor Arya car driving skills | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியான நடித்து பல லட்ச ரசிகர்களின் ஆதரவை பெற்று தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் முழுக்க முழுக்க ரசிகர்களை நகைச்சுவையால் மகிழ்வித்து அவர்களின் வரவேற்பை பெற்றது. நடிகர் சந்தானம் நடிப்பில் ‘கிக்’ , ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. இதனிடையே இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைகளத்தில் நடிகர் சந்தனம் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ‘டிடி ரிட்டன்ஸ்’. முன்னதாக இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்று இன்று தமிழகமெங்கும் வெளியாகியுள்ளது. டிடி ரிட்டன்ஸ் படத்திற்கு ரசிகர்கள் தங்கள் தற்போது ஆதரவை அளித்து வருகின்றனர். அதன்படி இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சந்தானம் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் ரசிகர் ஒருவர் குறித்து பேசுகையில்,

"ஒரு நேரம் கார் இடிச்சிட்டாங்க.‌ என்னனு பார்க்க போனா உங்க காமெடியெல்லாம்  செம்ம காமெடி தலைவா னு சொல்லி அவன் சந்தோஷப்பட்டு அவன் கிளம்பிட்டான். கார் இடிச்சது கூட அவன் மறந்துட்டு போய்ட்டான்.‌நான் கொஞ்சம் நேரம் கடுப்புல இருந்தேன்‌ அப்பறம் நானே சிரிச்சிட்டு விட்டேன். அவங்க அப்படி தான்.. அவங்க அன்பு அப்படி.. அப்படிதான் நம்மளையும் பார்க்குறாங்க.. “ என்றார் சந்தானம்..

தொடர்ந்து கார் ஓட்டும்போது என்ன சிந்தனையில் இருப்பீர்கள் என்ற கேள்விக்கு,  "நான் வாகனம் ஓட்றன ரோடு மேலதான் கவனம் வெச்சிருப்பேன். நான் உட்கார்ந்துட்டு போறேன்னா கொஞ்சம் தியான நிலையில தான் போவேன். தேவையான விஷயம் மட்டும்தான் பேசுவேன். தேவையில்லாத யோசனைகள் தான் பயணம் செய்யும் போதுதான் நடக்கும். அதை முடிந்தளவு கட்டுபடுத்த வேண்டும். ஆன்மீகத்தில சொல்வாங்க முதல் 100 கிமீ அமைதியா பயணம் செய்யனும்னு அதுதான் முதல் தேர்வு.. அதனால் பயணம் செய்யும் போது அமைதியா தான் இருப்பேன்."  என்றார் நடிகர் சந்தானம்.

அதனை தொடர்ந்து தன் சக நடிகர்களும் நண்பர்களுமான ஆர்யா, விஷால், கார்த்தி குறித்து கேட்கையில்,  "மூன்று பேரும் நல்லா ஓட்டுவாங்க.. ஆனா ஆர்யா ஒரு ரேசர் மாதிரி‌.. கார் வேகமா ஓட்டுவான். ஒரு கல்லூரியின் கதை பண்ணும் போது ஸ்ரீபெரும்பத்தூர் ல இருந்து 45 நிமிஷத்துல கார்ல சென்னைக்கு வருவான். அவ்ளோ வேகமா ஓட்டுவான். அதுக்குள்ளே எங்களுக்குள்ள போட்டி வரும்.. இவன் ஆர்யா 800 ல போய் அடிப்பான் எல்லோரையும்... பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் போது மினி கூப்பர் கார் அவன் ஓட்டி பார்த்தான்.  அப்பறம் என்கிட்ட சொல்லாம அவன் வாங்கிட்டான். அப்பறம் அவன் போன் பண்ணி திட்றான்.. கால் இடிக்குதுனு..” என்றார் நடிகர் சந்தானம்.

மேலும் தொடர்ந்து நடிகர் சந்தானம் அவர்கள் அவரது திரைப்பயணம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட வீடியோ இதோ..

 

 

ஆஸ்கர் மியூசியத்தில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் ஏ ஆர் ரஹ்மான் – இணையத்தில் ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

ஆஸ்கர் மியூசியத்தில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் ஏ ஆர் ரஹ்மான் – இணையத்தில் ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

ரஜினிகாந்த், கமல் ஹாசன் படங்களில் பணியாற்றிய பிரபலம் காலமானார்.. ஆழ்ந்த சோகத்தில் திரையுலகினர்..
சினிமா

ரஜினிகாந்த், கமல் ஹாசன் படங்களில் பணியாற்றிய பிரபலம் காலமானார்.. ஆழ்ந்த சோகத்தில் திரையுலகினர்..

வாசகர்களால் கொண்டாடப்பட்ட நாவலை வெப் சீரிஸாக இயக்கும் சசிகுமார்.. - சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட Exclusive Interview இதோ..
சினிமா

வாசகர்களால் கொண்டாடப்பட்ட நாவலை வெப் சீரிஸாக இயக்கும் சசிகுமார்.. - சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட Exclusive Interview இதோ..