தனுஷின் அடுத்த பிரம்மாண்டமான Pan-India படம்... பிறந்தநாள் வாழ்த்துக்களோடு அதிரடி அப்டேட் கொடுத்த D51 படக்குழு!

தனுஷின் பிரம்மாண்டமான Pan-India படமாக வரும் D51 அப்டேட்,dhanush sekhar kammula pan india film d51 movie shoot update | Galatta

நாளை ஜூலை 28ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு D51 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டது. ஆரம்பக் கட்டத்தில் நடிகராக அறிமுகமான சமயத்தில் உருவக்கேலி உட்பட எக்கச்சக்கமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த நடிகர் தனுஷ் தனது கடின உழைப்பால் வளர்ந்து அத்தனை விமர்சனங்களையும் தகர்த்தெறிந்து தற்போது இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். அந்த வகையில் அடுத்தடுத்து நடிகர் தனுஷ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக தனுஷ் நடிப்பில் முதல் ஹிந்தி படமாக வெளிவந்த ராஞ்ஜனா (தமிழில் அம்பிகாபதி) மற்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த அத்ராங்கி ரே (தமிழில் கலாட்டா கல்யாணம்) ஆகிய படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து மீண்டும் தனுஷ் - ஆனந்த்.எல்.ராய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக தேரே இஸ்க் மெய்ன் எனும் புதிய ஹிந்தி படத்தில் இணைந்திருக்கிறது. சமீபத்தில் தேரே இஸ்க் மெய்ன் திரைப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வெளிவந்த நிலையில் விரைவில் அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது திரை பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான அதிரடி ஆக்சன் திரைப்படமாக தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. ராக்கி மற்றும் சாணிக் காயிதம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் இந்த கேப்டன் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நாளை ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் பரிசாக இப்படத்தின் முதல் GLIMPSE வீடியோ வெளிவர இருக்கிறது.

அடுத்ததாக தனது திரை பயணத்தில் 50-வது திரைப்படமாக உருவாகும் புதிய திரைப்படத்தை தற்போது நடிகர் தனுஷ் தொடங்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த புதிய திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் நடிகர் தனுஷ் பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த வரிசையில் தனுஷின் 51-வது திரைப்படமாக உருவாகும் PAN INDIA திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு தற்போது வெளியானது. வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மற்றொரு தெலுங்கு இயக்குனரான தேசிய விருது பெற்ற சேகர் கமுல்லா இயக்கத்தில் உருவாகும் புதிய D51 படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP நிறுவனம் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் Pvt Ltd ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த D51 திரைப்படத்தின் பட பூஜை ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த கையோடு D51 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்ற அதிரடி அறிவிப்பை D51 படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அட்டகாசமான அந்த போஸ்டர் இதோ… 
 

Presenting to you all the Next of multi-talented @dhanushkraja - #D51 🤘🏾💸#HappyBirthdayDhanush ❤️

A @sekharkammula film.

Shoot begins soon.@AsianSuniel @puskurrammohan @SVCLLP @amigoscreation @UrsVamsiShekar @RIAZtheboss @V4umedia_#SekharKammula #Dhanush #NarayanDasNarang pic.twitter.com/TbyQtT6qQq

— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) July 27, 2023

சினிமா

"கொளுத்தி போடு டப்பாஸ!"- சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் மாவீரன் பட கலக்கலான சீனா சீனா பாடலின் UNCUT வீடியோ இதோ!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி - கீர்த்தி சுரேஷ் - தமன்னாவின் வேதாளம் ஹிந்தி ரீமேக்கான போலா ஷங்கர்… மிரட்டலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

மெகா ஸ்டார் சிரஞ்சீவி - கீர்த்தி சுரேஷ் - தமன்னாவின் வேதாளம் ஹிந்தி ரீமேக்கான போலா ஷங்கர்… மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் பட அடுத்த சர்ப்ரைஸ் 'ON THE WAY!'- முன்னணி பாடகர் கொடுத்த செம்ம அப்டேட்!
சினிமா

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் பட அடுத்த சர்ப்ரைஸ் 'ON THE WAY!'- முன்னணி பாடகர் கொடுத்த செம்ம அப்டேட்!