ஆஸ்கர் மியூசியத்தில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் ஏ ஆர் ரஹ்மான் – இணையத்தில் ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

ஆஸ்கர் அருங்காட்சியத்தில் ஏ ஆர் ரஹ்மானுடன் உலகநாயகன் கமல் ஹாசன் பதிவு உள்ளே - Kamal haasan ar Rahman visited Oscar museum | Galatta

இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர் நடிகர் கமல் ஹாசன். பல தசாப்தங்களாக தனக்கென தனி ரசிகர் கூட்டத்துடன் திரைத்துறையின் முன்னோடியாக இருந்து வரும் கமல் ஹாசனின் முந்தைய திரைப்படமான விக்ரம் இமாலய வெற்றியை கொடுக்க அதன்படி கமல் ஹாசன் தற்போது பல முக்கியமான படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அதன்படி ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ‘KH233’ என்ற படத்தை இயக்குனர் எச் வினோத் கூட்டணியில் நடிக்கவுள்ளார் உலகநாயகன் கமல் ஹாசன். அதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் ‘KH234’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி பான் இந்திய அளவு வெளியாகவிருக்கும் பிரம்மாண்ட படைப்பான பிரபாஸின் ‘கல்கி  2898AD’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்.

இதனிடையே தற்போது கமல் ஹாசன் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. லைகா தயாரிப்பு மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இறுதிகட்ட படபிடிப்பில் தற்போது கமல் ஹாசன் இணைந்துள்ளார். இப்படத்திற்கான அதி நவீன தொழில்நுட்ப வேலைகள் பணியில் படக்குழு தீவிரமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் கமல் ஹாசன் இதற்கான பணிகளிளுக்கு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமைந்துள்ள ஆஸ்கார் மியூசியத்தில் சென்று பார்த்துள்ளார். இந்த நிகழ்வில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை சந்தித்துள்ளார்.

rajinikanth kamal haasan movie editor r vittal passes away at 91

இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வில் ஏ ஆர் ரஹ்மானுடன் கமல் ஹாசன் ஆஸ்கர் விருது நிகழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் கண்டு ரசித்தார். மேலும் ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது மேடையில் இரண்டு விருதுகளுடன் நிற்கும் புகைப்படமும் இதில் அடங்கியுள்ளது. மேலும் மார்லன் பிராண்டோ நடிப்பில் வெளியாகி உலகின் தலை சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் ‘காட் பாதர்’ திரைப்பட காட்சிகளை கமல் ஹாசன் பார்த்து நிற்பதை ஏ ஆர் ரஹ்மான் தனது கைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “தலை சிறந்த ஒருவர் தலை சிறந்த மற்றொருவரை பார்த்து வருகிறார்” என்று குறிப்பிட்டுளார். இதையடுத்து இணையத்தில் ரசிகர்களால் ஏ ஆர் ரஹ்மான் பதிவு வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

A post shared by ARR (@arrahman)

உலகநாயகன் கமல் ஹாசன் – ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் முன்னதாக இந்தியன், தெனாலி ஆகிய படங்கள் வெளியானது. இதையடுத்து இருவரும் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘KH234’ படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். முன்னதாக இருவரும் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தில் இணைந்ததும் குறிப்பிடதக்கது.

ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ வெற்றியையடுத்து ‘மரகத நாணயம் 2’-வை கையில் எடுத்த இயக்குனர்..! – ரசிகர்களால் வைரலாகும் அட்டகாசமான அப்டேட்..
சினிமா

ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ வெற்றியையடுத்து ‘மரகத நாணயம் 2’-வை கையில் எடுத்த இயக்குனர்..! – ரசிகர்களால் வைரலாகும் அட்டகாசமான அப்டேட்..

“உங்களுக்கு பிடிச்ச வேலைய பிடிச்ச விதத்தில் பண்ணுங்க..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த துல்கர் சல்மான்.!
சினிமா

“உங்களுக்கு பிடிச்ச வேலைய பிடிச்ச விதத்தில் பண்ணுங்க..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த துல்கர் சல்மான்.!

வசூலில் மாஸ் காட்டிய மாரி செல்வராஜின் மாமன்னன்.! -  கொண்டாட்டங்களுடன் வெளியான ‘கொடி பறக்குற காலம்’ பாடலின் வீடியோ..
சினிமா

வசூலில் மாஸ் காட்டிய மாரி செல்வராஜின் மாமன்னன்.! - கொண்டாட்டங்களுடன் வெளியான ‘கொடி பறக்குற காலம்’ பாடலின் வீடியோ..