கில்லர் கில்லர் "கேப்டன் மில்லர்" பட வெறித்தனமான டீசர்... தனுஷின் பிறந்த நாளுக்கு மிரள வைக்கும் ஆக்ஷன் ட்ரீட் இதோ!

தனுஷின் கேப்டன் மில்லர் பட டீசர் வெளியீடு,Dhanush in captain miller movie teaser out now | Galatta

நடிகர் தனுஷின் பிறந்தநாளுக்கு பரிசாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அதிரடியான டீசர் வெளியானது. தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகராகவும் இந்திய சினிமாவின் மிக முக்கிய நாயகராகவும் உலக சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகராகவும் தனக்கென தனி பாதை வகுத்து தரமான திரைப்படங்களையும் அட்டகாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த நடிப்பின் அசுரன் நடிகர் தனுஷ் இன்று (ஜூலை 28) தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். உலகெங்கும் உள்ள பல கோடி ரசிகர்களும் பிரபலங்களும் நடிகர் தனுஷின் பிறந்த நாளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் நமது கலாட்டா குழுமமும் நடிகர் தனுஷுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

நடிகராக தனுஷ் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கின்றன. அந்த வகையில் தனது D50 படத்தை தனுஷ் கையில் எடுத்திருக்கிறார். தனது திரை பயணத்தில் 50வது திரைப்படமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடிகிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூலித்த வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் D51 படத்தில் அடுத்து தனுஷ் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து ராஞ்ஜனா (அம்பிகாபதி) படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தேரே இஷ்க் மெயின் எனும் புதிய ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் ஒரு தெலுங்கு இயக்குனரின் புதிய படத்திலும் நடிக்க இருக்கும் தனுஷ், விடுதலை பாகம் 2 மற்றும் வாடிவாசல் படத்திற்கு பின் இயக்குனர் வெற்றிமாறன் உடன் வடசென்னை 2 படத்திலும் இணைய இருக்கிறார்.  

இதனிடையே ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அதிரடியான படம் தான் கேப்டன் மில்லர். தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிற நிலையில், கேப்டன் மில்லர் டீசர் தற்போது சரியாக 12.01AM மணிக்கு தனுஷின் பிறந்தநாள் பரிசாக வெளியானது. 1 நிமிடம் 33 வினாடிகள் கொண்ட இந்த மொத்த டீசரும் ஆரம்பம் முதல் இறுதி வரை பக்கா ஆக்சன் நிறைந்ததாக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் வெறித்தனமான ஆக்ஷனில் வந்த கேப்டன் மில்லர் படத்தின் டீசர் இதோ…

ரிலீஸுக்கு ரெடியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் ஜெயிலர்... அதிரடியாக வந்த சென்சார் அறிக்கை இதோ!
சினிமா

ரிலீஸுக்கு ரெடியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் ஜெயிலர்... அதிரடியாக வந்த சென்சார் அறிக்கை இதோ!

சினிமா

"கொளுத்தி போடு டப்பாஸ!"- சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் மாவீரன் பட கலக்கலான சீனா சீனா பாடலின் UNCUT வீடியோ இதோ!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி - கீர்த்தி சுரேஷ் - தமன்னாவின் வேதாளம் ஹிந்தி ரீமேக்கான போலா ஷங்கர்… மிரட்டலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

மெகா ஸ்டார் சிரஞ்சீவி - கீர்த்தி சுரேஷ் - தமன்னாவின் வேதாளம் ஹிந்தி ரீமேக்கான போலா ஷங்கர்… மிரட்டலான ட்ரெய்லர் இதோ!