ரஜினிகாந்த், கமல் ஹாசன் படங்களில் பணியாற்றிய பிரபலம் காலமானார்.. ஆழ்ந்த சோகத்தில் திரையுலகினர்..

பிரபல படத்தொகுப்பாளர் ஆர் விட்டல் மறைந்தார் விவரம் உள்ளே - Popular editor R vittal Passes away | Galatta

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவான் கலைஞராய் வாழ்ந்து உச்சநட்சத்திரங்களின் பாராட்டுகளை பெற்ற‌ பிரபல படத்தொகுப்பாளர் ஆர்.விட்டல் உடல்நலக்குறைவினால் மறைந்தார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்று ஒட்டுமொத்த திரையுலகினரும் கொண்டாடி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் ஆகியோரின் திரைப்பயணத்தில் வியாபார ரீதியாக காமர்ஷியல் ஹிட் கொடுத்ததில் பெரும் பங்கு வகித்தவர் இயக்குனர் எஸ் பி முத்துராமன்.  இவரது பெரும்பாலான திரைப்படங்கள் பட்டி தொட்டியெல்லாம் விசில் பறக்க ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இயக்குனர் எஸ் பி முத்துராமன் வெற்றி பயணத்தில் முக்கிய காரணாமாக இருந்தவர்களில் ஒருவர் ஆர் விட்டல். எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் விட்டல். ஏறத்தாழ 71 திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் தெலுங்கும் இந்தி என 300க்கும் மேற்பட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றி திரைத்துறையில் ஜாம்பவனாக வலம் வந்தவர் ஆர் விட்டல். அதன்படி ஆடு புலி ஆட்டம், ஜப்பானில் கல்யாணராமன், பாயும் புலி, விக்ரம், ராஜா சின்ன ரோஜா, முரட்டுக் காளை போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் விட்டல் படதொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ வி எம் நிறுவனத்தின் ஆஸ்தான படத்தொகுப்பாளராகவும் விட்டல் இருந்து வந்தார்.  ரஜினி, கமல் மட்டுமல்லாமல் சிவாஜி படங்களுக்கும் பணியாற்றியுள்ளார் என்பது குரிப்பிடதக்கது.

படதொகுப்பாளராக மட்டுமல்லாமல் திரைத்துறையில் இயக்குனராகவும் விட்டல் களம் இறங்கி பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். அதன்படி அவருடைய இயக்கத்தில், தொட்டதெல்லாம் பொன்னாகும், முடிசூடா மன்னன், வீட்டுக்கு வந்த மருமகன் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

திரையுலகில் புகழ்பெற்ற கலைஞராய் வலம் வந்த விட்டல் சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார். அதிலிருந்து நிதானமாக குணமடைந்து வந்த விட்டல் நேற்று (ஜூலை 26) அன்று உயிரிழந்தார். இவரது இழப்பு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரது மறைவிற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

“உங்களுக்கு பிடிச்ச வேலைய பிடிச்ச விதத்தில் பண்ணுங்க..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த துல்கர் சல்மான்.!
சினிமா

“உங்களுக்கு பிடிச்ச வேலைய பிடிச்ச விதத்தில் பண்ணுங்க..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த துல்கர் சல்மான்.!

வசூலில் மாஸ் காட்டிய மாரி செல்வராஜின் மாமன்னன்.! -  கொண்டாட்டங்களுடன் வெளியான ‘கொடி பறக்குற காலம்’ பாடலின் வீடியோ..
சினிமா

வசூலில் மாஸ் காட்டிய மாரி செல்வராஜின் மாமன்னன்.! - கொண்டாட்டங்களுடன் வெளியான ‘கொடி பறக்குற காலம்’ பாடலின் வீடியோ..

“என்னையும் என் குடும்பத்தாரையும் மிரட்டாதீர்கள்..” சர்ச்சைக்குள்ளான படத்தை கைவிட்ட தயாரிப்பாளர்.. இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

“என்னையும் என் குடும்பத்தாரையும் மிரட்டாதீர்கள்..” சர்ச்சைக்குள்ளான படத்தை கைவிட்ட தயாரிப்பாளர்.. இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே..