பைக் ரைடில் பட்டையை கிளப்பும் தாராள பிரபு நடிகை !
By Aravind Selvam | Galatta | November 05, 2020 18:51 PM IST

அருண் விஜய் நடித்த தடம் படத்தில் அறிமுகமானவர் தன்யா ஹோப்.இந்த படத்திலேயே இளைஞர்களின் கனவுக்கன்னியாக அவதரித்து விட்டார்.இன்ஸ்டாகிராமில் இவர் போடும் போட்டோக்களும்,வீடியோக்களும் லைக்களை அள்ளி வந்தன.
இதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான தாராள பிரபு படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.
கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அவ்வப்போது தனது நடன வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.தற்போது இவர் நடனமாடும் போது நடந்த சிக்கல்கள்,மிஸ்ஸான ஸ்டெப்புகள் குறித்த வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.கடந்த மாதம் நிறைய நடன விடீயோக்களை பதிவிட்ட தான்யா ஹோப் தற்போது அந்த நடனமாடும்போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.தலைகுப்பற கீழே விழுவது போலவும் பதிவிட்டுள்ள அவர் அடுத்ததடவை நெக் brace வைத்துக்கொண்டு இதெல்லாம் பண்ணவேண்டும் என்று கடைசியாக பதிவிட்டிருந்தார்.
தற்போது பைக் ஓட்டுவது போல ஒரு வீடீயோவை தான்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவர் இவ்வளவு சூப்பராக பைக் ஓட்டுவாரா என்று ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் அந்த வீடீயோவை பார்த்து ஷேர் செய்து வருகின்றனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Thalapathy Vijay's Political Entry - first official breaking statement!
05/11/2020 05:46 PM
WOW: Super exciting announcement on Kamal Haasan 232 | Lokesh Kanagaraj
05/11/2020 05:19 PM
Popular Tamil film personality trolls Suchi for her Bigg Boss decisions!
05/11/2020 04:48 PM