ஆகச்சிறந்த நடிகராக படத்திற்கு படம் தனது நடிப்பால் புதுப்புது உயரங்களை எட்டி வரும் நடிகர் தனுஷ் அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே முதல் முறை தமிழ் மற்றும் தலைவனை இரு மொழிகளில் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் வாத்தி.

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அல்லூரி எழுதி இயக்கியுள்ள வாத்தி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் வாத்தி திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார், ஸ்ருதிகா, தனிக்கெல்லா பரணி, ஆடுகளம் நரேன், இளவரசு, ஹரிஷ் பெரடி, பிரவீனா ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர்.

j.யுவராஜ் ஒளிப்பதிவில் நவீன் நூலி படத்தொகுப்பு செய்யும் வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வாத்தி (தெலுங்கில் SIR) திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற டிசம்பர் 2ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. 

இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் முதல் பாடலாக வா வாத்தி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. ஜீவ பிரகாஷ் இசையில், நடிகர் தனுஷ் எழுத, பாடகி ஸ்வேதா மோகன் பாடியிருக்கும் வா வாத்தி பாடல் தற்போது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. தனுஷின் வாத்தி பட அட்டகாசமான வா வாய்தி பாடல் இதோ…