தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்தவகையில் சீயான் விக்ரமுடன் துருவநட்சத்திரம், விஷ்ணு விஷால் உடன் மோகன்தாஸ் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. 

மேலும் ஒரு நாள் கூத்து & மான்ஸ்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஃபர்ஹானா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் தீயவர் கொலைகள் நடுங்க மற்றும் SG.சார்லஸ் இயக்கத்தில் சொப்பன சுந்தரி ஆகிய படங்களும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் டிரைவர் ஜமுனா. 

வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படத்தை 18 ரீல்ஸ்ஸ் சார்பில் S.P.சௌத்ரி தயாரித்துள்ளார். கோகுல் பெண்டி ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பு செய்திருக்கும் டிரைவர் ஜமுனா படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆக்சன் திரில்லர் படமாக தயாராகி இருக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படம் நாளை நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பில், “நவம்பர் 11ஆம் தேதியன்று வெளியாவதாக இருந்த எங்கள் "டிரைவர் ஜமுனா" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. தாமதத்திற்கு வருந்துகிறோம் அத்துடன் மிக விரைவில் திரைப்படத்தை உங்களின் பார்வைக்கு கொண்டுவர இருக்கிறோம். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். தங்களின் மேலான ஆதரவிற்கும் அன்பிற்கும் தலை வணங்குகிறோம்" என தெரிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு இதோ…
 

Our #DriverJamuna is postponed from its said release on November 11 to a later date

The new release date will be announced soon

We thank you for your love and patience

Team#DriverJamuna @aishu_dil @kinslin @SPChowdhary3 @GhibranOfficial @gokulbenoy #AnlArasu pic.twitter.com/Mp40A6E9FJ

— 18 Reels (@18Reels_) November 10, 2022