முன்னணி ரேடியோ வர்ணனையாளராக தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்த RJ பாலாஜி நகைச்சுவை நடிகராகவும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் கதாநாயகனாகவும் ரசிகர்கள் விரும்பும் என்டர்டெய்னிங் திரைப்படங்களில் நடித்துவரும் RJ.பாலாஜி முன்னதாக LKG திரைப்படத்தை எழுதி நடித்திருந்தார்.

இதனை அடுத்து நயன்தாராவுடன் இணைந்த RJபாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. கடைசியாக இந்த ஆண்டில்(2022) பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்காக RJபாலாஜி, சத்யராஜ் & ஊர்வசி நடித்து வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த வரிசையில் அடுத்ததாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா மற்றும் ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் புதிய படத்தில் RJ.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள இப்படத்திற்கு சிங்கப்பூர் சலூன் என பெயரிடப்பட்டுள்ளது.

RJபாலாஜி உடன் இணைந்து பிக் பாஸ் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்திருக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இன்று நவம்பர் 10ஆம் தேதி இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெறும் உலகக் கோப்பை டி20 அரையிறுதி போட்டியின் தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் RJ.பாலாஜியுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ் சிங்கப்பூர் சலூன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். கலக்கலான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

#SingaporeSaloon ❤️@VelsFilmIntl #DirGokul 💝#InTheatresSummer2023 pic.twitter.com/Hmy0eW3pI0

— RJ Balaji (@RJ_Balaji) November 10, 2022