தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அஜித் குமார் தற்போது இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு(2023) ஜனவரியில் பொங்கல் வெளியீடாக துணிவு திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அதே பொங்கல் வெளியீடாக தளபதி விஜய்யின் வாரிசு படமும் ரிலீஸாக இருப்பதால் வரும் பொங்கலை ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் AK62 திரைப்படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸான அஜித்குமாரின் வேதாளம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இயக்குனர் சிவா இயக்கிய வேதாளம் படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார். இதில் ஆலுமா டோலுமா பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது. இன்றோடு (நவம்பர் 10) வேதாளம் திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் இதனை கொண்டாடும் வகையில் வேதாளம் படத்தின் படத்தொகுப்பாளர் ரூபன், வேதாளம் படத்தின் ஸ்பெஷல் ட்ரெய்லரை கட் செய்து வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முக்கியமான படத்தொகுப்பாளர்களில் ஒருவரான ரூபன் இந்த ஆண்டில்(2022) சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி, கார்த்தியின் சர்தார் உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். 

மேலும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் படத்திற்கும் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்திலேயே வேதாளம் படத்தின் ஸ்பெஷல் ட்ரெய்லர் கட் குறித்து தெரிவித்திருந்த ரூபன் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தற்போது வேதாளம் ஸ்பெஷல் கட் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். அந்த ட்ரெய்லர் இதோ…
 

GlorytoGod 😇🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

As promised to the beloved fans of our #Ajith sir & To celebrate the 7th release Anniversary of #Vedalam ,here s my Trailer Cut.#7yearsofVedalam#VedalamTrailer #SivaandTeam@directorsiva @anirudhofficial @vetrivisuals pic.twitter.com/T3GzJ8GIt5

— Editor Ruben (@AntonyLRuben) November 9, 2022