தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR தனது தந்தை T.ராஜேந்தர் அவர்களின் மருத்துவ உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சில வாரங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் தனது படப்பிடிப்புகளில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் சிலம்பரசன்.TR இணைந்து நடிக்கும் பத்து தல திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் சிலம்பரசன்.TR தற்போது நடித்து வருகிறார். பத்து தல இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மூன்றாவது முறையாக இணைந்துள்ள இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்-சிலம்பரசன்.TR-ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றி கூட்டணியில் தயாராகியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரபலமான OTT தளங்களில் ஒன்றான ஆஹா தமிழ் தளத்தின் விளம்பர படத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ளார். அட்டகாசமான சிலம்பரசன்TRன் அந்த விளம்பரப் பட வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த விளம்பர பட வீடியோ இதோ…
 

Eppovume 100% Tamil entertainment nammala innaikum..🫂 Intha Aadi, aha offer-oda semmaya irukkum!!🥰

Download @ahaTamil app and subscribe today ▶️https://t.co/YBnnBIQEod #aha100PercentTamil #ahaAadiThallubadi pic.twitter.com/TcSo9NAZjl

— Silambarasan TR (@SilambarasanTR_) August 7, 2022