ஆகச் சிறந்த நடிகராக தொடர்ந்து பலவிதமான கதை களங்களில் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் நடிகர் தனுஷ் அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி திரைப்படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.

முன்னதாக தமிழில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படமும் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது.
 
தொடர்ந்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் நடிகர் தனுஷ் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தின் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படம் தி க்ரே மேன். ஜேக்கப் தி ஹன்டர் எனும் மிரட்டளான முக்கிய கதாப்பாத்திரத்தில் தி க்ரே மேன் திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களான ரியான் கோஸ்லிங், கிரிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோருடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் திரைப்படம் வருகிற ஜூலை 15ஆம் தேதி திரையரங்கிலும் ஜூலை 22-ம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் ரிலீஸாகவுள்ளது.

தி க்ரே மேன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தங்களது இனிய நண்பர் நடிகர் தனுஷை சந்திப்பதற்காக தி க்ரே மேன் திரைப்படத்தின் இயக்குனர்களான ரூசோ சகோதரர்கள் இந்தியா வருவதாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் இயக்குனர்கள் மற்றும் தனுஷ் இணைந்து வெளியிட்ட ஸ்பெஷல் அறிவிப்பு வீடியோ இதோ…