தமிழ் சினிமா ரசிகர்களிடம் தனது வித்தியாசமான கதைத்தேர்வின் மூலம் நல்ல நடிகராக உருவெடுத்துள்ளவர் அதர்வா.கடைசியாக 2019-ல் இவர் நடித்த ரொமான்டிக் படமான தள்ளிபோகாதே படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம்,ஒத்தைக்கு ஒத்த,Trigger உள்ளிட்ட படங்கள் அடுத்து வெளியாகவுள்ளன.இதனை அடுத்து இவர் நடிக்கும் படத்தினை ஐங்கரன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.இது ஐங்கரன் தயாரிப்பில் உருவாகும் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தினை கார்த்திக் நரேன் இயக்குகிறார்.ரஹ்மான் மற்றும் சரத்குமர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.நிறங்கள் மூன்று என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வித்தியாசமான பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்