தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக டாக்டர் படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.ஸ்ரீ  வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் bilingual ஆக உருவாகிறது.

SK 20 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை தெலுங்கில் சூப்பர்ஹிட் அடித்த Jathi Rathnalu பட இயக்குனர் அனுதீப் இயக்குகிறார்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

இதுகுறித்த தமன் பதிவிட்ட ட்வீட்டை மேற்கோள்காட்டி சிவகார்த்திகேயன் உங்கள் ஹிட் பாடல்களுக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த தமன் உங்கள் கவிதைகளுக்கு காத்திருக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் பாடல் எழுதுவதை ஹிண்ட் ஆக தெரிவித்துள்ளார்.ஏற்கனவே சிவகார்த்திகேயன் எழுதிய கல்யாண வயசு,காந்தகண்ணழகி,செல்லம்மா பாடல்கள் ஹிட் அடித்த நிலையில் இவர் அடுத்ததாக எழுதும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.