தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து  தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த திட்டம் இரண்டு மற்றும் பூமிகா ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் உடன் துருவநட்சத்திரம் திரைப்படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் விஷ்ணு விஷால் உடன் இணைந்து மோகன்தாஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் ரீமேக்காக அதே பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் ராகுல் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை RDC மீடியா சார்பில் துர்காராம் சௌத்ரி மற்றும் நீள் சௌத்ரி இணைந்து தயாரித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சன்ட் இசையமைத்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு தினத்தில் வெளியான நிலையில் தற்போது செகன்ட் லுக் போஸ்டர் வெளியானது.ட்ரைலர் விரைவில் வெளிவரவுள்ளதாக அறிவித்துள்ளனர். அந்த போஸ்டர் இதோ…