தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர ஹீரோவாகவும் மிக சிறந்த நடிகராகவும் வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிரவுள்ள திரைப்படம் மாறன்.இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகி வரும் நானே வருவேன் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

மேலும் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்களான ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில் தி க்ரே மேன் படத்தில் தனுஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே கடந்த டிசம்பர் 24ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக ரிலீசானது.

தனுஷுடன் இணைந்து அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் நடித்துள்ள அத்ரங்கி ரே படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என வெளியானது.  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள அத்ரங்கி ரே திரைப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அத்ரங்கி ரே படத்திலிருந்து லிட்டில் லிட்டில் பாடல் வீடியோ தற்போது வெளியானது. கலக்கலான லிட்டில் லிட்டில் பாடல் இதோ…