கடந்த 2018-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சென்சேஷனல் ஹிட் அடித்த திரைப்படம் RX 100.இந்த படத்தில் நடித்த ஹீரோ கார்திகேயாவுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.இதனை தொடர்ந்து இவர் மேலும் சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.இந்த படங்களும் வரிசையாக ஹிட் அடித்தன.

ஹீரோவாக மட்டுமல்லாமல் கடந்த 2019ஆம் ஆண்டு நானி ஹீரோவாக நடித்த படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்து மிரட்டியிருந்தார்.இந்த படத்தில் இவர் வில்லனாக நடித்து பலரது பாராட்டுகளை அள்ளினார்.அடுத்ததாக சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து இவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் பொங்கல் 2022-க்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கார்த்திகேயா தனது நீண்டநாள் காதலியான லோஹிதாவை திருமணம் செய்துகொள்ள இருந்தார்.

இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்தது.தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது பல முன்னணி தெலுங்கு நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.இந்த போட்டோக்களும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.இவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.