கடந்த சில வருடங்களாக OTTயின் வளர்ச்சி திரைத்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.பல படங்கள் நேரடியாக OTTதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.அடுத்ததாக சில படங்கள் நேரடியாக OTT தளங்களில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

அடுத்ததாக ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ள தமிழ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.சித்திரைச் செவ்வானம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் தமிழ்,தெலுங்கு என பல முன்னணி மொழிகளில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஸ்டண்ட் சில்வா இயக்கியுள்ளார்.இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் சில்வா.

சமுத்திரக்கனி,ரீமா கல்லிங்கல் படத்தின் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து, சினிமாவில் தனது என்ட்ரியை கொடுக்கிறார்.இதற்கு முன் இயக்குனர் விஜய் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியது, குறும்படங்களில் நடிப்பது உள்ளிட்டவற்றை செய்திருந்தார் பூஜா கண்ணன்.

சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்,இயக்குனர் விஜய் இந்த படத்தினை தயாரித்துள்ளார்.இந்த படம் டிசம்பர் 3ஆம் தேதி நேரடியாக ஜீ5-ல் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.