சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக  முனீஷ்வர்நாத் பண்டாரி சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று பொறுப்பேற்றார்.

mn

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து  சென்னை ஐகோர்ட்டில் 2-வது மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி எம்.துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மேலும் அலகாபாத் ஐகோர்ட்டின் நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று காலை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்படிருந்தது.

அதனைத்தொடர்ந்து  முனீஸ்வரர்நாத் பண்டாரி, நேற்று ஜெய்ப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை சென்னை ஐகோர்ட்டு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றிருந்தனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி இன்று ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றார். எம்.என். பண்டாரிக்கு  ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிபதிகள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உடனிருந்தனர்.