இன்றைய காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக அதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை படைத்த நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இவரது வளர்ச்சி பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.

சோலோ ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி.தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை.அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் VJS 46,காத்துவாக்குல ரெண்டு காதல்,வெற்றிமாறனின் விடுதலை உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதி நடித்திருந்த கடைசி விவசாயி பட சில காரணங்களால் ரிலீசாகாமல் இருந்தது.இந்த படத்தினை காக்கா முட்டை,ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கியுள்ளார்.tribal ஆர்ட்ஸ் ப்ரொடக்ஷன் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.யோகி பாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த படத்தின் ட்ரைலர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்