விஜய் டிவியின் வித்தியாசமான முயற்சியாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியது குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் நிறைவடைந்து மூன்றாவது ஒளிபரப்பாகி வருகிறது.10 போட்டியாளர்கள் மற்றும் 10 கோமாளிகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தொடர்கின்றனர்.கோமாளிகளாக மணிமேகலை,சிவாங்கி,சுனிதா மற்றும் பாலா உள்ளிட்டோர் உள்ளனர்.

இவர்களை தவிர சக்தி,குரேஷி,சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன் உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக இணைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் ஆகியுள்ளது.இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.குக் வித் கோமாளி நிகழிச்சியில் அவ்வப்போது சில திரைப்பட நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளுவார்கள்.

சிலம்பரசன் TR,சிவகார்த்திகேயன் ஆகியோரை தொடர்ந்து தற்போது மற்றுமொரு ஸ்டார் நடிகர் குக் வித் கோமாளிக்கு வருகை தந்துள்ளார்.சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ஹே சினாமிகா பட நாயகன் துல்கர் சல்மான் வரும் வார எபிசோடில் வரவுள்ளார்.இவருடன் இணைந்து படத்தின் நாயகி அதிதி ராவ் மற்றும் இயக்குனர் பிருந்தா கலந்துகொள்கின்றனர்.இதுகுறித்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.