“வெற்றிமாறன் - பா.ரஞ்சித் அடுத்த படம் யாரோடு?”- உலகநாயகன் கமல்ஹாசனுடன் முன்னணி இயக்குனர்கள்! விவரம் உள்ளே

கமல்ஹாசன் உடன் வெற்றிமாறன் பா ரஞ்சித் இருக்கும் புகைப்படம்,directors vetrimaaran pa ranjith dharani with ulaganayagan kamal haasan | Galatta

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற திரைக்கலைஞராகவும், ஒட்டுமொத்த சினிமா கலைஞர்களும் தங்களது முன்னோடியாக கருதும் உலகநாயகன் கமல்ஹாசன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கலைப் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் கடைசியாக தனது தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த விக்ரம் திரைப்படம் கமல்ஹாசன் அவர்களின் திரைப்பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டையாடியது.

அடுத்ததாக தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது கமல்ஹாசன் நடித்து வருகிறார். முன்னதாக ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கி தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்து, இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் KH234 திரைப்படம் தயாராக இருக்கிறது. ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் KH234 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இது மட்டுமல்லாமல் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதும் கமல்ஹாசன் கதாநாயகனாகவும் நடிக்க இருக்கிறார்.

இந்த வரிசையில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களான வெற்றிமாறன் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரது படங்களிலும் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் ஒரு பிரம்மாண்ட படைப்பாக தயாராகும் அத்திரைப்படம் விரைவில் தொடங்குவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

அதேபோல் விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களே தெரிவித்திருந்தார். இதனிடையே தற்போது உலகநாயகனுடன் இயக்குனர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், தரணி மற்றும் சந்தான பாரதி ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

விடுதலை திரைப்படத்தை முடித்த கையோடு வாடிவாசல் படத்தை இயக்க இருக்கும் வெற்றிமாறன் அடுத்த படத்தில் கமல்ஹாசன் அவர்களுடன் இணைய இருக்கிறாரா? அல்லது சீயான் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தை இயக்கி வரும் பா.ரஞ்சித் தனது அடுத்த திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணை இருக்கிறாரா? என்ற எதிர்பார்ப்பில் செய்திகள் பரவி வருகின்றன.

அல்லது தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனர்களில் ஒருவரான தரணி அவர்களும் உடன் இருப்பதால், ஒஸ்தி திரைப்படத்திற்கு பிறகு 12 ஆண்டுகளுக்குப் பின் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கி, தரணி கம்பேக் கொடுப்பாரா அல்லது கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தை தரணி இயக்கவுள்ளாரா? என்றும் எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. 

இது போக லோகேஷ் கனகராஜின் LCUல் வரும் திரைப்படங்களிலும்  கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். எது எப்படியோ இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு இதில் எந்த இயக்குனரின் படத்தில் கமல்ஹாசன் இணைய இருக்கிறாரோ? என்பது வரும் நாட்களில் தெரிய வரும். ஆனால் ஓய்வின்றி ரசிகர்களை மகிழ்விக்க உலகநாயகன் எப்போதும் தயாராகவே இருக்கிறார் என்பது மட்டும் எப்போதுமே நிஜம்.

ஒற்றை புகைப்படம் சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகளையும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் அது தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் உடன்  இயக்குனர்கள் வெற்றிமாறன் - பா.ரஞ்சித் - தரணி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புகைப்படம் தான். ட்ரெண்டாகும் அந்த புகைப்படம் இதோ… 
 

What's Cookin here! 😉

Kamal Hassan with Pa Ranjith, Santhana Bharathy, Vetrimaaran & Dharani🔥🔥@ikamalhaasan @beemji #Vetrimaaran #SanthanaBharathy #Dharani #KamalHassan #Indian2 #Galatta pic.twitter.com/aSbz1Ni7ub

— Galatta Media (@galattadotcom) February 10, 2023

ராகவா லாரன்ஸின் மிரட்டலான ருத்ரன்... முதல் பாடல் குறித்த அசத்தலான அறிவிப்பு இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸின் மிரட்டலான ருத்ரன்... முதல் பாடல் குறித்த அசத்தலான அறிவிப்பு இதோ!

என்ன நடந்தாலும் சரி... மகன்கள் மீதான தனுஷின் பாசம் குறித்து மனம் திறந்த வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரி! வைரல் வீடியோ
சினிமா

என்ன நடந்தாலும் சரி... மகன்கள் மீதான தனுஷின் பாசம் குறித்து மனம் திறந்த வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரி! வைரல் வீடியோ

வாத்தி வரார் போட்றா வெடிய... பக்கா மாஸாக வந்த தனுஷின் வாத்தி பட அதிரடியான ட்ரெய்லர் இதோ!
சினிமா

வாத்தி வரார் போட்றா வெடிய... பக்கா மாஸாக வந்த தனுஷின் வாத்தி பட அதிரடியான ட்ரெய்லர் இதோ!