சர்தார் தயாரிப்பாளரின் அடுத்த அட்டகாசமான படைப்பு... சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

ரன் பேபி ரன் இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ்,prince pictures again joins with run baby run director for next movie | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த சர்தார் திரைப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் மிரட்டலான இரட்டை வேடங்களில் நடிகர் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.

அதிரடியான ஸ்பை திரில்லர் திரைப்படமாக அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் தயாராக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ரன் பேபி ரன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் RJ. பாலாஜி கதாநாயகனாக நடித்த ரன் பேபி ரன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது வழக்கமான திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் RJ.பாலாஜி நடித்த திரில்லர் திரைப்படமாக வெளிவந்துள்ள ரன் பேபி ரன் திரைப்படம் தற்போது சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ரன் பேபி ரன் திரைப்படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வரிசையாக அட்டகாசமான படைப்புகளை தயாரிக்க திட்டமிட்டுள்ள ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் குறிப்பிடப்படும் இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படங்களுக்காக கைக்கோர்த்துள்ளது. அந்தவகையில், இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தை தயாரிக்க இருக்கும் ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட்டான FIR திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் புதிய திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
 
அதேபோல் சமீபத்தில் நடிகர் SJ.சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த வதந்தி வெப் சீரிஸின் இயக்குனரும், விஜய் ஆண்டனி மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடித்த கொலைகாரன் திரைப்படத்தின் இயக்குனருமான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் புதிய படத்தையும் ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த வரிசையில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரன் பேபி ரன் திரைப்படத்தின் இயக்குனர் ஜியன் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளதாக ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் S.லக்ஷ்மன் குமார் அவர்களுடன் இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இணைந்திருக்கும் புகைப்படத்தோடு ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ள புதிய படத்தின் அட்டகாசமான அறிவிப்பு இதோ…
 

Joining hands with @JiyenKrishna for another exciting project.

Further announcements soon!@lakku76 @venkatavmedia @johnmediamanagr pic.twitter.com/rWNTziBdRX

— Prince Pictures (@Prince_Pictures) February 9, 2023

என்ன நடந்தாலும் சரி... மகன்கள் மீதான தனுஷின் பாசம் குறித்து மனம் திறந்த வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரி! வைரல் வீடியோ
சினிமா

என்ன நடந்தாலும் சரி... மகன்கள் மீதான தனுஷின் பாசம் குறித்து மனம் திறந்த வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரி! வைரல் வீடியோ

வாத்தி வரார் போட்றா வெடிய... பக்கா மாஸாக வந்த தனுஷின் வாத்தி பட அதிரடியான ட்ரெய்லர் இதோ!
சினிமா

வாத்தி வரார் போட்றா வெடிய... பக்கா மாஸாக வந்த தனுஷின் வாத்தி பட அதிரடியான ட்ரெய்லர் இதோ!

தளபதி விஜயின் லியோ படத்திலிருந்து விலகலா..? வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா! வைரல் புகைப்படம் உள்ளே
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்திலிருந்து விலகலா..? வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா! வைரல் புகைப்படம் உள்ளே