பரபரக்கும் தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படப்பிடிப்பு... ட்ரெண்டாகும் காஷ்மீர் ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!

லியோ படத்தின் காஷ்மீர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியானது,thalapathy vijay lokesh kanagaraj in leo movie new shooting spot photo | Galatta

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக, தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக விளங்கும் தளபதி விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தயாராக இருப்பதாக தற்போது சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகுமா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் இயக்குனராக முத்திரை பதித்து கைதி திரைப்படத்திற்கு பிறகு மிக முக்கிய இயக்குனராக வளர்ந்து தளபதி விஜயுடன் முதல் முறை இணைந்த மாஸ்டர் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியால் முன்னணி இயக்குனராக உயர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் கைகோர்த்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் மெகா ஹிட்டாகி ஆல் டைம் ரெக்கார்ட்டாக வசூலில் பெரும் சாதனை படைத்தது.

விக்ரம் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்தும், மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜயுடன் இணைவதும் என எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி 67 திரைப்படமாக லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி 67 திரைப்படத்தின் டைட்டிலான லியோ - ப்ளடி ஸ்வீட் என்பதை அறிவிக்கும் வகையில் தளபதி விஜயின் பக்கா மாஸான ப்ரோமோ வெளியானது. வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித்குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக இணைந்திருக்கும் லியோ திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்  பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் ஆகியோருடன் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

கைதி படத்தில் நெப்போலியன் எனும் போலீஸ் கதாபாத்திரத்தில் கலக்கிய நடிகர் ஜார்ஜ் மரியன் லியோ படத்தின் படப்பூஜையில் கலந்து கொண்டதால் அவரும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. மேலும் நடிகர் ஜார்ஜ் மரியன் நடிப்பதால் லியோ திரைப்படம் LCUல் இணைய வாய்ப்பிருப்பதாகவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கலை இயக்குனர் N.சதீஷ்குமாரின் கலை இயக்கத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பிற்கு இடையே படக்குழுவோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புதிய புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் தமிழ் படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் அந்தப் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ…
 

#Leo 🦁 #ThalapathyVijay #LokeshKanagaraj #Kashmir #Galatta pic.twitter.com/3pVd25FJa5

— Galatta Media (@galattadotcom) February 9, 2023

வாத்தி வரார் போட்றா வெடிய... பக்கா மாஸாக வந்த தனுஷின் வாத்தி பட அதிரடியான ட்ரெய்லர் இதோ!
சினிமா

வாத்தி வரார் போட்றா வெடிய... பக்கா மாஸாக வந்த தனுஷின் வாத்தி பட அதிரடியான ட்ரெய்லர் இதோ!

தளபதி விஜயின் லியோ படத்திலிருந்து விலகலா..? வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா! வைரல் புகைப்படம் உள்ளே
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்திலிருந்து விலகலா..? வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா! வைரல் புகைப்படம் உள்ளே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தின் ஆக்சன் டீம்... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தின் ஆக்சன் டீம்... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!