விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2.. மிரட்டலான முதல் காட்சியை வெளியிட்ட படக்குழு - வைரலாகும் வீடியோ இதோ..

பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் காட்சியை முன்னோட்டமாக வெளியிட்ட படக்குழு - Pichaikaran 2 movie first four minutes scene released | Galatta

சமீபத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி  பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்துக்குள்ளானார். கடும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட விஜய் ஆண்டனிக்கு ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் தங்களது வருத்தங்களையும் பிராத்தனைகளையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சையில் குணமடைந்து வரும் விஜய் ஆண்டனி ரசிகர்களின் பிராத்தனைக்கு நன்றி தெரிவித்து சமீபத்தில் பதிவிட்ட செய்தி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் விஜய் ஆண்டனி நடித்தும் இயக்கியும் வரும் பிச்சைக்காரன் திரைப்படத்தின் அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்டார் விஜய் ஆண்டனி. பிச்சைகாரன் 2 திரைப்படத்தின் முதல் நான்கு நிமிட காட்சி முன்னோட்டமாக வெளியிட்டுள்ளார். மனிதனின் இதயம், சிறுநீரகம், கண் இடமாற்றம் செய்யும் மருத்துவ திறன் ஒருபடி முன்னேறி மூளை இடமாற்றம் செய்வது குறித்த சுவாரஸ்மான நேர்காணலும் வில்லனான தேவ் கில் அறிமுகத்துடன் படத்தின் டைட்டில் அறிமுகப்படுத்துகின்றானர். மிரட்டலான பிச்சைகாரன் 2 முதல் காட்சி தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகி வரும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய விஜய் ஆண்டனி இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த  திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் விஜய் ஆண்டனி. சுமார்  40 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள விஜய் ஆண்டனி 'நான்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலே மிகப்பெரிய வெற்றி. அதனை தொடர்ந்து தன் நடிப்பின் மூலம் பல பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன், கோடியில் ஒருவன். தற்போது விஜய் ஆண்டனி ‘கொலை’, ‘அக்னி சிறகுகள்', 'காக்கி', 'மழை பிடிக்காத மனிதன்', 'வள்ளி மயில்' போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.  மேலும் 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார்.

பெரும் விபத்தையடுத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய விஜய் ஆண்டனியை ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.  மேலும் அவரது பிச்சைகாரன் 2 பாகத்தின் முன்னோட்டத்தையும் தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

‘வேலைன்னு வந்துட்டா..’ ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மும்முரம் காட்டும் இயக்குனர் ஷங்கர் - வைரலாகும் புகைப்படம் இதோ..
சினிமா

‘வேலைன்னு வந்துட்டா..’ ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மும்முரம் காட்டும் இயக்குனர் ஷங்கர் - வைரலாகும் புகைப்படம் இதோ..

இசைஞானி இளையராஜா இசையில் யுவன் குரலில் “யார் இந்த பேய்கள்” - வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் Music Video இதோ..
சினிமா

இசைஞானி இளையராஜா இசையில் யுவன் குரலில் “யார் இந்த பேய்கள்” - வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் Music Video இதோ..

அஜித் ரசிகர்களே தயாரா?.. எதிர்பார்த்திருந்த அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்.. - வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

அஜித் ரசிகர்களே தயாரா?.. எதிர்பார்த்திருந்த அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்.. - வைரலாகும் அறிவிப்பு இதோ..