தமிழ் சினிமாவில் பல போராட்டங்களை கடந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் சீயான் விக்ரம்.கடின உழைப்பால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக மெனக்கெட்டு ரசிகர்களின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தம் இவரது கடின உழைப்புக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவர் நடித்துள்ள கோப்ரா,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.இதனை அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம்.

இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் பட டீஸர் இன்று ஒரு பிரம்மாண்ட விழாவுடன் வெளியிடப்படவுள்ளது.தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சீயான் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

என்ன காரணம் என்று விசாரித்தபோது விக்ரமுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாகவும் , அதற்காக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் விக்ரம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.விரைவில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.