தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராக விளங்கும் சீயான் விக்ரம் அவர்கள் அடுத்ததாக ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.முன்னதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல விதமான கெட்டப்புகளில் சீயான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

விரைவில் கோப்ரா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம் ஆதித்த கரிகாலன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படம் இந்த ஆண்டு கோடை வெளியீடாக ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த வரிசையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் மகான். 

சீயான் விக்ரமுடன் இணைந்து முதல் முறையாக அவரது மகன் துருவ் விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மகான் படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் மகான் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியிருக்கும் மகான் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் மகான் திரைப்படத்தின் மிரட்டலான ட்ரைலர் தற்போது வெளியானது அந்த டிரைலரை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.