குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கதாநாயகனாக வளர்ந்து பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், திரைக்கதையாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.T.R. இன்று (பிப்ரவரி 3ஆம் தேதி) தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் நடிகர் சிலம்பரசன்.T.R.-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், கலாட்டா குழுமமும் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் சினிமாவில் அதிரடியான கம்பேக் கொடுத்துள்ள நடிகர் சிலம்பரசன்.T.R. தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரகுமான் - சிலம்பரசன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துவரும் சிலம்பரசன்.T.R. அடுத்ததாக வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனிடையே இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் பத்து தல படத்தில் சிலம்பரசன்.T.R. மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பத்து தல படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிலம்பரசன்.T.R.-ன் பிறந்த நாளான இன்று பத்து தல படத்தில் இருந்து மாஸ்ஸான GLIMPSE வீடியோவும் வெளியிடப்பட்டது.

முன்னதாக கடந்த ஆண்டின்(2021) இறுதியில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில், சிலம்பரசன்.T.R. கதாநாயகனாக நடித்த மாநாடு திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. இந்நிலையில் தற்போது மாநாடு திரைப்படத்தின் கலக்கலான மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. அந்த மேக்கிங் வீடியோ இதோ…