“கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலில், சீன தரப்பில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம்” என்கிற அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபர்பபை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, இந்தியா எல்லையான லடாக் பகுதியில், சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக, இந்திய எல்லையில், சீன தொடர்ந்து அத்து மீறல்களை அரங்குற்றி தொடர்ச்சியாக பிரச்சனைகளையும் செய்து வருகிறது.

அதன் படியே, கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15 ஆம் தேதி அன்று நள்ளிரவு நேரத்தில், லடாக் எல்லையில் இந்தியா - சீன படைகள் இடையே மோதம் ஏற்பட்டது.

அதன்படி, லடாக் எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்து மீறி நுழைந்த சீன ராணுவம், இந்திய ராணுவத்தினர் மீது திடீரென பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். சீன வீரர்கள், இந்தியப் படையினர் மீது முதலில் கற்களை வீசி தாக்கியதாகவும் கூறப்பட்டது. 

அதன்படி கற்களாலும், கம்பிகளாலும் இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அங்கு கடுமையான பதற்றம் ஏற்பட்டது.

இந்த தாக்காதலில், இந்தியா தரப்பில் ராணுவ அதிகாரி ஒருவரும், 2 வீரர்களும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் அப்போது வெளியானது.

இதனைத் தொடர்ந்து, இந்த பயங்கர மோதலில் இந்திய வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்தாதாக அடுத்தக்கட்ட தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், “தங்களது தரப்பில் உயிரிழப்பு எதும் நிகழவில்லை” என்று, முதலில் கூறிய சீனா, அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கல்வான் மோதல் குறித்த தகவலை வெளியிட்டது. 

அப்போது, “கல்வான் மோதலில், சீன தரப்பில் 4 வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக” சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

ஆனால், சீனா தெரிவித்திருந்த இந்த தகவலில் சந்தேகம் இருப்பதாகவும், உண்மையான உயிரிழப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்” என்றும், பல்வேறு தரப்பிலும் தொடர்ச்சியாக கூறப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தான், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில், சீனா வீரர்களின் உயிரிழப்பு இன்னும் அதிகமாக நிகழ்ந்திருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதாவது, ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும் பிரபல புலனாய்வு செய்தி நிறுவனம் தி ஹலாக்சன் என்னும் தனியார் நிறுவனம், கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்த அதிர்ச்சி அளிக்கும் புதிய தகவலை தற்போது வெளியிட்டு உள்ளது.

அதன்படி, “கல்வான் மோதலில் சீன வீரர்கள் அதிக உயிரிழப்பை சந்தித்து உள்ளதாக” தெரிவித்து உள்ளது.

அதுவும், “நள்ளிரவில் இந்திய வீரர்களுடனான மோதலின் போது, சீன வீரர்கள் கடும் குளிர் நிறைந்த உறையும் நிலையில் இருந்த ஆற்றில் குதித்து தப்பிச் சென்றனர் என்றும், அப்போது பல சீன வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்” என்றும், கூறியுள்ளது.

குறிப்பாக, “38 சீன வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆனால் ஒரே ஒரு வீரர் மட்டுமே ஆற்றை கடக்கும் போது உயிரிழந்ததாக சீனா தெரிவித்து உள்ளது” என்றும், சுட்டிக்காட்டி உள்ளது. 

இதன் மூலமாக, கல்வான் பள்ளத்தாக்கு மோதலில், சீன தரப்பில் ஒட்டுமொத்தமாக 41 வீரர்கள் வரை உயிரிழந்திருக்கலாம்” என்றும், தி ஹலாக்சன் புலனாய்வு நிறுவனம் பரபரப்பு செய்தியை வெளியிட்டு உள்ளது. தற்போது, இந்த செய்தி உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.