சியான் விக்ரமின் கோப்ரா பட மேக்கிங் வீடியோ இதோ !
By Aravind Selvam | Galatta | August 31, 2022 16:36 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சியான் விக்ரம்.கடின உழைப்பால் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் விக்ரம்.இவரது வித்தியாசமான படங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் நடித்துள்ள கோப்ரா படம் இன்று வெளியாகவுள்ளது.அடுத்து பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.கோப்ரா படத்தினை டிமான்டி காலனி,ஜமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ்,ரோபோ ஷங்கர்,மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே எஸ் ரவிக்குமார்,ரோஷன் மேத்யூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.நட்சத்திர கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இன்று படம் இன்று பல இடங்களில் சிறப்பு காட்சிகளோடு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.பல கெட்டப்களில் விக்ரம் ரெடி ஆகும் இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்