விக்னேஷ் சிவன்-நயன்தாரா தயாரிப்பில் வரும் ரொமான்டிக் படம்! வைரல் கேரக்டர் போஸ்டர்கள்
By Anand S | Galatta | August 31, 2022 16:24 PM IST

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடித்து வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
அடுத்ததாக முதல் முறை அஜித் குமாருடன் இணைந்திருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் #AK62 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தங்களது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நல்ல திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் ரொமாண்டிக் காதல் திரைப்படமாக தயாராகியுள்ள திரைப்படம் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம். இயக்குனர் விநாயக்.V இயக்கியுள்ள இப்படத்தில் சூரரைப்போற்று பட நடிகர் கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியம் (KK) மற்றும் பிரபல பாடகி ஜொனிதா காந்தி இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் மாலதி சஹர், ரியா சுமன், ரேச்சல் டேவிட் மற்றும் வைஷ்ணவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். CH.சாய் ஒளிப்பதிவில் அருண் சண்டி இசையமைத்துள்ள வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் திரைப்படத்திற்கு கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் தற்போது வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
ஜெய் கணேஷ் கதாபாத்திரத்தில் கிருஷ்ணகுமார், பிக்கு கதாபாத்திரத்தில் ஜொனிதா காந்தி, கெதிகா-வாக ரியா சுமன், அனாமிகா-வாக மாலதி சஹர், சங்கமித்ரா-வாக வைஷ்ணவி மற்றும் தேஜோன் மாயா கதாபாத்திரத்தில் ரேச்சல் டேவிட் ஆகியோர் நடித்திருக்கும் அந்தந்த கதாபாத்திரங்களின் போஸ்டர்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.